க்விட் காரின் 1.0 லிட்டர் என்ஜின் , ஏஎம்டி மாடல்கள் விரைவில்

0

தொடக்கநிலை சந்தையில் மிகச்சிறப்பான மாடலாக இடம்பிடித்துள்ள ரெனோ க்விட் காரின் 1.0 லிட்டர்  என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் அடுத்த சில வாரங்களில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. மேலும் ரெனோ க்விட் கார் ஆட்டோ மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரவுள்ளது.

renault-kwid-amt

Google News

2016 டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிப்படுத்தப்பட்ட ரெனோ க்விட் ஏஎம்டி மற்றும் க்விட் 1.0 லிட்டர் என்ஜின் என இரு மாடல்கள் மேலும் கிளைம்பர் ,ரேசர் போன்ற கான்செப்ட் மாடல்களும் காட்சிப்படுத்தப்பட்டது. தீவர சோதனை ஓட்டத்தில் இருந்து வரும் 1.0 லிட்டர் மற்றும் ஏஎம்டி மாடல்கள் அடுத்த சில வாரங்களில்விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம்.

விற்பனையில் உள்ள க்விட்  காரில் 53.2 bhp ஆற்றல் வெளிப்படுத்தும் 799 சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் இழுவைதிறன் 72 Nm ஆகும்.  இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டடுள்ளது. ரெனோ க்விட் கார் மைலேஜ் லிட்டருக்கு 25.17கிமீ ஆகும்.

வரவுள்ள புதிய க்விட் 1.0லி (SCe – Smart Control efficiency) என்ஜின் 70 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் வகையில் சாதரன வேரியண்டின் தோற்ற அமைப்பிலே அமைந்திருக்கும்.பின்புறத்தில் பேட்ஜ் மட்டும்பெற்றிருக்கும். உட்புற அமைப்பிலும் எந்த மாற்றங்களும் இல்லாமல் அமைந்திருக்கும்.

க்விட் 1.0 லிட்டர் ஈசி-ஆர் ஏஎம்டி வேரியண்ட் 60 bhp ஆற்றல் வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருக்கலாம். தோற்றத்தில் எந்த மாற்றங்களும் இல்லாமல் அமைந்திருக்கும். க்விட்ஏஎம்டி மாடல் சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தரவல்லதாக ஒரு லிட்டருக்கு 21 கிமீ மைலேஜ் தர வாய்ப்புள்ளது.

renault-kwid-1.0litre-shocased

போட்டியாளர்கள்

க்விட் 1.0 லி மாடல் மாருதி ஆல்ட்டோ கே10 , ஹூண்டாய் இயான் 1.0 மற்றும் டட்சன் கோ போன்ற கார்களுக்கு போட்டியை ஏற்படுத்தும். ஆல்ட்டோ கே10 ஏஎம்டி , செலிரியோ ஏஎம்டி காருக்கும் க்விட் ஏஎம்டி போட்டியை ஏற்படுத்தலாம்.

எதிர்பார்க்கும் விலை

க்விட் 1.0 லிட்டர் மற்றும் ஏஎம்டி மாடல்கள் விலை ரூ.3 லட்சம் முதல் ரூ. 4.20 லட்சம் வரையிலான விலையில் அமையலாம்.

renault-kwid-amt