சக்திவாய்ந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி விரைவில்

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி காரில் அதிக ஆற்றலை வெளிப்படுத்தும் மாடல் விரைவில் வரவுள்ளது.  வேரிகோர் 400 என்ஜினை டாடா சஃபாரி ஸ்ட்ராம் பெற்றிருக்கும்.

டாடா சஃபாரி ஸ்ட்ராம் எஸ்யூவி

மேம்படுத்தப்பட்ட புதிய டாடா சஃபாரி ஸ்ட்ராம் சில மாதங்களுக்கு முன்னதாக விற்பனைக்கு வந்துள்ளது. விரைவில் வரவுள்ள சக்திவாய்ந்த  சஃபாரி ஸ்ட்ராம் காரில் ஆற்றல் மற்றும் கியர்பாக்ஸ் போன்றவற்றில் மாற்றம் தரப்பட்டுள்ளது. வேரிகோர்  400 டாப் வேரியண்டான VX யில் மட்டுமே கிடைக்கும்.

154.8 பிஹெச்பி ஆற்றலை வழங்கும் வேரிகோர் 400 2.2 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப்பட்ட உள்ளது. மேலும் இதன் டார்க் 400 என்எம் ஆகும். இதில் 6 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இருக்கும்.

tata safari strom dashboard

LX  மற்றும் EX வேரியண்டில் 2.2 லிட்டர் Varicor டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 148பிஎச்பி ஆகும். இதன் முறுக்கு விசை 320என்எம் ஆகும். 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.

மேலும் படிக்க ; மேம்படுத்தப்பட்ட டாடா சஃபாரி ஸ்ட்ராம்

மற்றபடி மேம்படுத்தப்பட்ட டாடா சஃபாரி ஸ்ட்ராம் காரிலிருந்த மாற்றங்களை கொண்டுள்ளது. இன்னும் சில தினங்களில் சக்திவாயந்த டாடா சஃபாரி ஸ்ட்ராம் விற்பனைக்கு வரவுள்ளது.

Tata Safari Storme to get powerful engine