சர்வதேச அளவில் சிறந்த விளங்கும் என்ஜின்களுக்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. 2015ம் வருடத்தின் சிறந்த புதிய என்ஜினாக பிஎம்டபிள்யூ 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
உலகின் 31 நாடுகளை சேர்ந்த 65 முன்னனி ஆட்டோமொபைல் பத்திரிக்கையாளர்களால் பெர்ஃபாமன்ஸ் , ஓட்டுதல் தன்மை , சத்தம் மற்றும் எரிபொருள் சிக்கனம் போன்ற காரணங்களை கொண்டு தீர்மானிக்கப்படுகின்றது.
மொத்தம் 8 பிரிவுகளாக என்ஜின் பிரிக்கப்பட்டு அதன்கீழ் வழங்கப்படுகின்றது.
1. 1.0 லிட்டர் என்ஜின் – ஃபோர்டு ஈக்கோபூஸ்ட்
1.0 லிட்டருக்கு குறைவான பிரிவில் ஃபோர்டு நிறுவனத்தின் 999சிசி 3 சிலிண்டர் ஈக்கோபூஸ்ட் என்ஜின் பெற்றுள்ளது. நான்காவது வருடமாக தொடர்ந்து இந்த விருதினை ஈக்கோபூஸ்ட் வென்றுள்ளது. ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரில் உள்ள என்ஜினாகும்.
2. 1.0 – 1.4 லிட்டர் என்ஜின் -பிஎஸ்ஏ பியோஜியூட் சிட்டோரவன்
1.0 – 1.4 லிட்டருக்கு குறைவான பிரிவில் பியோஜியூட் சிட்டோரவன் 1.2லிட்டர் 3 சிலிண்டர் என்ஜின் பெற்றுள்ளது. பியோஜியூட் 208 கார்.
3. 1.4 – 1.8 லிட்டர் என்ஜின் – பிஎம்டபிள்யூ 1.5 லிட்டர் என்ஜின்
இந்த வருடத்தின் சிறந்த என்ஜினாகவும்
பிஎம்டபிள்யூ 1.5 லிட்டர் பெட்ரோல் ஹைபிரிட் என்ஜின் பெற்றுள்ளது. இந்த என்ஜின்தான் பிஎம்டபிள்யூ ஐ8 காரில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
4. 1.8 – 2.0 லிட்டர் என்ஜின் – மெர்சிடிஸ்-ஏஎம்ஜி 2.0 லிட்டர்
மெர்சிடில்- ஏஎம்ஜி 2.0 லிட்டர் டர்போ என்ஜின் பெற்றுள்ளது. உலகின் மிகவும் சக்திவாய்ந்த என்ஜின் என்ற பெருமை கொண்ட என்ஜினாகும். மெர்சிடிஸ் ஏஎம்ஜி A45 , CLA45 , GLA45 போன்ற கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
5. 2.0 – 2.5 லிட்டர் – ஆடி 2.5 லிட்டர் டர்போ
5 சிலிண்டர் கொண்ட்
ஆடி 2.5 லிட்டர் டர்போ என்ஜின் வென்றுள்ளது. பயன்படுத்தப்பட்ட மாடல்கள் ஆடி RS3 , ஆடி RS Q3 .
6. 2.5 -3.0 லிட்டர் – பிஎம்டபிள்யூ 3.0 லிட்டர்
6 சிலிண்டர்களை கொண்ட பிஎம்டபிள்யூ 3.0 லிட்டர் ட்வீன் டர்போ என்ஜின் பொருத்தப்பட்ட மாடல்கள் பிஎம்டபிள்யூ M3 , M4 .
7. 3.0 – 4.0 லிட்டர் – 3.8 லிட்டர் மெக்லாரன்
3.0 – 4.0 லிட்டருக்கான பிரிவில் வி8 சிலிண்டர் ட்வீன் டர்போ 3.8 லிட்டர் மெக்லாரன் என்ஜின் பெற்றுள்ளது. மெக்லாரன் 675LT , 650S ,12C , 625C மாடல்களாகும்.
8. 4.0 லிட்டருக்கு மேல் – வி8 ஃபெராரி 4.5 லிட்டர் என்ஜின்
இந்த வருடத்தின் சிறந்த பெர்ஃபாரமன்ஸ் என்ஜினாக ஃபெராரி 458 இட்டாலியா மற்றும் 458 ஸ்பெஷலே கார்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். வி8 ஃபெராரி 4.5 லிட்டர் என்ஜின் பெற்றுள்ளது.
2015ம் வருடத்தின் சிறந்த என்ஜின்
பிஎம்டபிள்யூ ஐ8 காரில் உள்ள 362பிஎஸ் ஆற்றலை தரவல்ல 1.5 லிட்டர் பெட்ரோல் எலக்ட்ரிக் ஹைபிரிட் என்ஜின்
2015ம் வருடத்தின் சிறந்த பெர்ஃபாரமன்ஸ் என்ஜின்
ஃபெராரி 458 இட்டாலியா மற்றும் 458 ஸ்பெஷலே கார்களில் பயன்படுத்தப்பட்டிருக்கும். 570பிஎஸ்(458 இட்டாலியா) மற்றும் 605பிஎஸ் (458 ஸ்பெஷலே) ஆற்றலை தரவல்ல வி8 ஃபெராரி 4.5 லிட்டர் என்ஜின் ஆகும்.
2015ம் வருடத்தின் சிறந்த சுற்றுசூழல் என்ஜின்
தெஸ்லா எஸ் மாடலில் பயன்படுத்தப்பட்டுள்ள முழுமையான எலக்ட்ரிக் பவர்ட்ரெயின் ஆகும்.
பிஎம்டபிள்யூ ஐ8 பற்றி படிக்க