சீனாவின் சாங்கன் ஆட்டோமொபைல் இந்தியா வருகை

0

சீனாவின் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனங்களில் ஒன்றான சாங்கன் ஆட்டோமொபைல் நிறுவனம் இந்திய சந்தையில் தன்னுடைய மாடல்களை விற்பனைக்கு கொண்டு வர திட்டமிட்டு வருகின்றது. சாங்கன் விலை மலிவான கார்கள் ,  செடான் மற்றும் எஸ்யூவி கார்களில் பிரசத்தி பெற்ற நிறுவனமாகும்.

Changan-CS15

Google News

இந்திய சந்தையில் களமிறங்கும் முதல் நிறுவனமாக சாங்கன் விளங்கும். மிக குறைந்த விலையில் சிறப்பான கார்களை ஜப்பான் மற்றும் ஐரோப்பிய கார்களுக்கு எதிராக சிறப்பான நிறுவனமாக உருவெடுக்கும் வகையில் திட்டமிட்டு வருகின்றது. அடுத்த நிதி ஆண்டில் இந்தியாவில் கார்களை விற்பனை செய்யவும் சென்னை அல்லது சென்னைக்கு அருகில் அமைந்துள்ள ஆந்திரா மாநிலத்தில் உள்ள ஸ்ரீசிட்டி தொழிற்பேட்டையில் அமைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சீனாவின் மிக பழமையான சாங்கன் விற்பனை எண்ணிக்கையின் அடியில் சீனாவின் 4வது இடத்தினை பெற்றுள்ளது. சாங்கன் நிறுவனம் சீன சந்தையில் ஃபோர்டு , சுசூகி மற்றும் பீஜோ சீட்ரோவன் நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்டு வருகின்றது. சீன சந்தையில் விலை மலிவான கார்கள் , செடான் மற்றும்  எஸ்யூவி போன்றவைகளை விற்பனை செய்துபிரபலமாக உள்ளது. அல்ஸ்வின், பென்னி, CX20, CS35 மற்றும் CS75 போன்ற மாடல்கள் பிரபலமாக உள்ளன.

Changan-alsvin

சீன சந்தையில் பிரசத்தி பெற்ற மாடல்களாக விளங்கும் செவர்லே சீனா நிறுவனத்துடன் இணைந்த தயாரிப்பான செவர்லே செயில் செடான் மற்றும் ஹேட்ச்பேக் மற்றும் என்ஜாய்    அடிப்படையிலான கார்கள் இந்தியாவில் வெற்றி பெறவில்லை. மற்றொரு தயாரிப்பான பிரிமியர் ரியோ போன்றவை பெரிதாக விற்பனையில் சோபிக்கவில்லை.