சாங்யாங் கொரண்டோ எஸ்யூவி இந்தியா வருகை

மஹிந்திராவின் சாங்யாங் கொரண்டோ எஸ்யூவி இந்தியாவில் இந்த ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்கு கொண்டு வர மஹிந்திரா திட்டமிட்டுள்ளது.

சாங்யாங் கொரண்டோ எஸ்யூவி

அழகான முகப்பு தோற்றம், மிக சிறப்பான உட்ப்புறம் மற்றும் சிறப்பான செயல்திறன் கொண்ட சாங்யாங் கொரண்டோ சி எஸ்யூவி பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் வெளிநாடுகளில் விற்பனையில் உள்ளது.

மிகவும் நேர்த்தியான முகப்புடன் கூடிய கிரில் , சிறப்பான ஸ்போர்ட்டிவ் தோற்றம் , அதிக இடவசதி கொண்ட உட்ப்புறம் மேலும் பல நவீன பொழுதுபோக்கு அம்சங்களை கொண்டுள்ளது.

சாங்யாங் கொரண்டோ எஸ்யூவி

பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் விற்பனை செய்யப்படாலும் இந்தியாவில் 2.0 லிட்டர் டீசல் என்ஜினில் மட்டும் விற்பனைக்கு வரலாம். இந்த என்ஜின் இரண்டு விதமான ஆற்றலை கொடுக்கும் வகையில் உள்ளது. அவை 149எச்பி மற்றும் 175எச்பி ஆகும். 6வேக மெனுவல் மற்றும் தானியங்கி கியர்பாக்ஸ் என இரண்டிலும் கிடைக்கும்.

சாங்யாங் கொரண்டோ எஸ்யூவி

5 இருக்கை வசதி கொண்ட கொரண்டோ எஸ்யூவி கார் பல வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகின்றது. 6 காற்றுப்பைகள் , க்ரூஸ் கன்ட்ரோல், ஏபிஎஸ் , இபிடி , இஎஸ்பி , பார்க்கிங் சென்சார் , ஹீல் ஸ்டார்ட் அசிஸ்ட் போன்ற பாதுகாப்பு விசதிகளை கொண்டுள்ளது.

இந்தியாவிலே பாகங்களை இறக்குமதி செய்து கட்டமைக்கப்பட உள்ளதால் மிகவும் சவாலான விலையில் விற்பனைக்கு வரலாம். மேலும் நிசான் டெரானோ, ரெனோ டஸ்ட்டர்,  வரவிருக்கும் ஹூண்டாய் ஐஎக்ஸ்25 போன்ற எஸ்யூவிகளுக்கு மிகுந்த சவாலினை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சாங்யாங் கொரண்டோ