சாங்யாங் டிவோலி எஸ்யூவி |
இரண்டு சாங்யாங் டிவோலி எஸ்யூவிகளை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்காக மஹிந்திரா இறக்குமதி செய்துள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்ப சில மாறுதல்களை செய்து விற்பனைக்கு அறிமுகம் செய்ய உள்ளது.
சர்வதேச அளவில் சாங்யாங் டிவோலி காரில் 1.6 லிட்டர் டீசல் மற்றும் பெட்ரோல் என்ஜின்களில் விற்பனை செய்யப்படுகின்றது. இந்தியாவில் 1.6 லிட்டர் டீசல் என்ஜினுக்கு மாற்றாக 1.5 லிட்டர் எம்ஹாக்80 என்ஜினும் , 1.6 லிட்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனில் டிவோலி வர வாய்ப்புகள் உள்ளது.
டிவோலி காரில் மெனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் ஆப்ஷனிலும் வரலாம்
தென்கொரியாவிலிருந்து பாகங்களை இறக்குமதி செய்து உள்நாட்டிலே அசெம்பிள் செய்ய வாய்ப்புள்ளதால் சவாலான விலையில் ஸ்கார்ப்பியோ எஸ்யூவி காருக்கு மேலாக நிலை நிறுத்த வாய்ப்பு உள்ளதால் க்ரெட்டா , டஸ்ட்டர் டெரானோ போன்ற மாடல்களுக்கு சவாலாக டிவோலி விளங்கும்.
மேலும் படிக்க ; சாங்யாங் டிவோலி எஸ்யூவி அறிமுகம்
Ssangyong Tivoli SUV to come next year