இந்தியாவின் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் டியாகோ ஹேட்ச்பேக் கார் விற்பனை எண்ணிக்கையை 50,000த்தை கடந்துள்ளது. 83,000த்திற்கு மேற்பட்ட முன்பதிவுகளுடன் டியாகோ சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.

டியாகோ ஹேட்ச்பேக்

  • இம்பேக்ட் டிசைன் வடிவத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் கார் டியாகோ ஆகும்.
  • 83,000 முன்பதிவுகளை கடந்த 50,000 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
  • டியாகோ காரை அடிப்படையாக கொண்ட டிகோர் செடான் வந்துள்ளது.

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் விற்பனைக்கு வந்த டியாகோ கார் அமோக ஆதரவினை மிகவும் சவாலான சந்தையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் அபரிதமான வடிவத்தை பெற்று மிக சிறப்பான ரெவோடார்க் மற்றும் ரெவோட்ரான் என்ஜினை பெற்று விளங்கும் மாடலாகும்.

70hp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83hp மற்றும் டார்க் 114Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா டியாகோ டீசல் கார் மைலேஜ் லிட்டருக்கு 27.28 கிமீ மற்றும் டியாகோ பெட்ரோல் கார் மைலேஜ் லிட்டருக்கு 23.84 கிமீ ஆகும்.

சமீபத்தில் டியாகோவை அடிப்படையாக கொண்ட ஸ்டைல்பேக் டிகோர் செடான் ரூ.4.70 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.