Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

சினிமா , கிரிக்கெட் பிரபலங்கள் வாரம் ஒரு சொகுசு கார் வாங்குவதன் பின்னணி என்ன ?

by automobiletamilan
June 12, 2017
in Wired, செய்திகள்

பெரும்பாலான சினிமா மற்றும் விளையாட்டு பிரபலங்கள் சொகுசு கார்கள் வாங்கினால் அந்த செய்தி இணையத்தில் வைரலாக சில நாட்கள் வலம் வரும் இதற்கு என்ன காரணம் பிரபலங்கள் ஏன் சொகுசு கார் வாங்கினால் பரபரப்பாகும் பின்னணி இதே..!

பிரபலங்களின் சொகுசு கார்கள்

நமது நாட்டில் சினிமா நட்சத்திரங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் போன்றவர்களின் தீவர ரசிகர்களாக பலர் உள்ள நிலையில் வாடிக்கையாளர்களை கவரும் நோக்கில் சொகுசு கார் பிராண்டு நிறுவனங்கள் பிரபலங்களுக்கு கார் விற்பனை செய்யும் பொழுது காரின் விற்பனை விலையில் 20 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை சலுகைகளை வாரி வழங்குவதாக எக்கானாமிக் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இளம் கிரிக்கெட் நட்சத்திரங்கள் , சிறிய அளவில் பிரபலமாக உள்ளவர்கள் மற்றும் சிறிய சினிமா நட்சத்திரங்களுக்கு 20 சதவிகித தள்ளுபடியும், மிகப்பெரிய அளவில் பிரபலமாக உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்களுக்கு அதிகபட்சமாக காரின் விற்பனை விலையில் சுமார் 60 சதவிகிதம் வரை தள்ளுபடியை வழங்குகின்றதாம்.

எதற்காக இந்த தள்ளுபடி என்றால் பிரபலங்கள் கார் வாங்கினால் உடனடியாக அந்த செய்தி டிவிட்டர், ஃபேஸ்புக் வாட்ஸஆப் என வைரலாக தொடங்கும் இதனால் அந்த பிராண்டினை பற்றி மக்கள் தேட விரும்புவார்கள் என்பதனால் இலவச விளம்பரத்தை அந்த பிராண்டு பெறும் இதனால் மற்றவர்களும் அதனை வாங்க விரும்புவார்கள் என்ற நோக்கத்திலே இவ்வாறு வழங்கப்படுகின்றதாம்.

மேலும் சில நிறுவனங்கள் முதல் இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு பிரபலங்களுக்கு கார்களை இலவசமாக பயன்படுத்த தருகின்றனராம், பிறகு அந்த பிரபலத்துக்கு கார் பிடித்திருந்தால் இரண்டாவது உரிமையாளராக காரை விற்பனை செய்கின்றதாம், இதனால் பிரபலத்திற்கு மிகப்பெரிய விலை சலுகை பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகின்றது.

சாருக்கான் ஹூண்டாய் நிறுவனத்துக்கும் சச்சின் பி.எம்.ட.பிள்யூ நிறுவனத்துக்கும் அம்பாசிடராக பல ஆண்டுகளாக பணியாற்றி வருகின்றனர். இவர்கள் இந்த நிறுவனங்களின் கார் அறிமுகம் மற்றும் முக்கிய நிகழ்வுகளில் பங்கேற்பதனை வழக்கமாக கொண்டுள்ளனர் என்பதனை பலரும் அறிவார்கள்.

இந்தியாவின் அனைத்து சலுகைகளுமே பிரபலங்களுக்குதான் சாதரன மக்களுக்கு மற்றும் விவசாயிகளுக்கு எந்த சலுகையையும் எந்த கார்ப்ரேட் நிறுவனங்களுக்கும் வழங்க தயாராகவே இல்லை என நன்றாகவே தெரிகின்றது. இது பற்றிய உங்கள் கருத்தை மறக்காமல் பதிவு செய்யுங்க..!

Tags: கார்
Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version