`செடான் கார்களுக்கான வரியை திரும்ப பெறுமா

0
மத்திய பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட வரியில் செடான கார்களை வரியில் இருந்து விடுவிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வரியின் விபரங்கள் இதுதான். அதாவது 4 மீட்டருக்கும் அதிகமான நீளத்தில் உள்ள கார்களுக்கும், 170 மில்லிமீட்டர் தரை இடைவெளி மூலம் உள்ள எஸ்யூவி கார்களுக்கும் வரி உயர்த்தப்பட்டது.

honda cr v

4 மீட்டர் நீளம் என்ற பிரிவினால் சில செடான் கார்களும் வரி உயர்வுக்கு ஆளாகின. அந்த வகையில் சிக்கிய செடான் கார்கள் ஹோண்டா சிவிக், சுசுகி எஸ்எக்ஸ்4, மற்றும் டொயோட்டா கரொல்லா ஆல்டிஸ் ஆகும்.

Google News

எஸ்யூவி கார்களுக்கான வரி உயர்வினை திரும்ப பெற சியாம் வலியறுத்தியது. ஆனால் மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.  மேலும் விற்பனை மந்தமாக உள்ளதால் செடான் கார்களை வரி விதிப்பில் இருந்து விடுவிக்க கோரிக்கை விடுத்தது.

இந்த கோரிக்கை ஏற்பதற்க்கான வாய்ப்பு உள்ளதால் செடான் கார்களுக்கு வரி விதிப்பு திரும்ப பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.