சென்னையில் டிஎஸ்கே-பெனெல்லி 2வது ஷோரூம் திறப்பு

0

இந்திய பிரிமியம் ரக மோட்டார்சைக்கிள் சந்தையில்மிக வேகமாக வளர்ந்துவரும் டிஎஸ்கே-பெனெல்லி நிறுவனம் 2வது டீலரை சென்னை மாநகரில் திறந்துள்ளது. சென்னையில் அமைந்திருக்கும் 2வது டீலரையும் பவர் சூப்பர் பைக்ஸ் நிறுவனமே தொடங்கியுள்ளது.

சென்னை அன்னா நகரில் அமைந்துள்ள இந்த புதிய விற்பனை மற்றும் சர்வீஸ் மையத்தில் பெனெல்லி பைக்குகள் வரிசை மற்றும் சர்வீஸ் போன்றவை கிடைக்க உள்ளது. முதன்முறையாக 2015 ஆம் ஆண்டில் இந்திய சந்தையில் நுழைந்த பெனெல்லி மிக வேகமாக வளர்ந்து வருகின்றது.

Google News

பெனெல்லி பைக்குகள்

பெனெல்லி நிறுவனம் இந்தியாவில் 250சிசி முதல் (டிஎன்டி25) 1131சிசி (டிஎன்டி ஆர்) வரையிலான 6 சூப்பர் பைக்குகளை விற்பனை செய்து வருகின்றன.இந்த பைக்குகளின் ஆரம்ப விலை ரூ.1.83 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஆகும்.

சென்னை பெனெல்லி பைக்குகள் விலை பட்டியல்

மாடல்கள் விலை விபரம்
TNT 25 ₹ 1,83,000
TNT 300 ₹ 3,08,000
TNT 600i (ABS) ₹ 5,83,000
TNT 600 GT ₹ 6,11,000
TNT 899 ₹ 9,70,000
TNT R ₹ 12,07,000

(அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை )

அடுத்த சில வாரங்களில் பெனெல்லி 302ஆர் மற்றும் டிஎன்டி 135 மினி பைக் போன்ற மாடல்கள் விற்பனைக்கு வரவுள்ளன.