சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வருகின்ற ஆக்ஸ்ட மாதம் முதல் இலவச சைக்கிள் திட்டம் ஒன்றை மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வழங்குகின்றது. இந்த மெட்ரோ சைக்கிளை இலவசமாக பயன்படுத்துவது மற்றும் பெறுவது குறித்து அறிந்து கொள்ளலாம்.

மெட்ரோ ரயில் சைக்கிள்

சென்னை பெருநகர போக்குவரத்து சிரமத்தை குறைப்பதற்கு முக்கிய பங்காற்ற தொடங்கி உள்ள சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் பயணிகளுக்கு கூடுதலான வசதிகளை வழங்கும் நோக்கில் ரயில் பயணிகள் அருகாமையில் உள்ள இடங்களுக்கு சைக்கிள் வாயிலாக பயணிக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வரும் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தொடங்கப்பட உள்ள இந்த சேவையில் முதற்கட்டமாக கோயம்பேடு பஸ் நிலையம், வடபழனி, அசோக்நகர், ஈக்காட்டுத்தாங்கல், பரங்கிமலை, ஷெனாய்நகர் மற்றும் நேரு பூங்கா ஆகிய இடங்களில் உள்ள மெட்ரோ ரெயில் நிலையங்களில் இலவச மிதிவண்டி சேவை தொடங்கப்பட உள்ளது. ஒவ்வொரு ரயில் நிலையங்களிலும் தலா 10 சைக்கிள்கள் வீதம் நிறுத்தி வைக்கப்பட உள்ளது.

கேரளா மாநிலத்தில் உள்ள கொச்சி மெட்ரோ ரயில் சேவையில் இதுபோன்ற இலவச மிதிவண்டி சேவையை வழங்கி வருகின்ற ஆதிஸ் பைசைக்கிள் கிளப் என்ற அமைப்புடன் இணைந்து இலவச சைக்கிள் சேவையை மெட்ரோ நிர்வாகம் சென்னை பெருநகரக்கும் வழங்க உள்ளது.

மெட்ரோ இலவச சைக்கிள் பெறும் வழிமுறை என்ன ?

சென்னை மெட்ரோ ரெயில் சேவையில் வழங்கப்பட உள்ள இந்த இலவச மிதிவண்டியை பெற பயணிகள் முன்பதிவு செய்ய வேண்டும், இதற்காக மெட்ரோ நிர்வாகம் விரைவில் தொலைபேசி எண் ஒன்றை வெளியிட உள்ளது.

இந்த எண்ணிற்கு உங்களை பற்றிய தகவல் மற்றும் ரெயில் பயணிகள் அட்டை எண் போன்றவற்றை பதிவு செய்து எஸ்எம்எஸ் அனுப்பும் வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அதனை பெற்றுக் கொண்டு ரயில் நிர்வாகம் அதனை பரிசீலித்துவிட்டு, பயணியின் செல்போனுக்கு பதில் எஸ்.எம்.எஸ். அனுப்பி வைக்கும், அதனை ரெயில் நிலையங்களில் உள்ள சைக்கிள் நிறுத்தும் இடத்தில் காண்பித்து சைக்கிள்களை பெற்றுக் கொள்ளலாம்.

அவ்வாறு பெறப்படும் சைக்கிள்கள் மெட்ரோவின் 7 ரயில் நிலையங்களில் எங்கேனும் ஒரு இடத்தில் திரும்ப சைக்கிள்களை ஒப்படைக்கலாம்.  இலவசமாக வழங்கப்படுகின்ற  மிதிவண்டி திருடு போகக்கூடிய வாய்ப்பு இருப்பதால், பயணிகள் தரும் கைப்பேசி எண்ணை வைத்து, அவரது முழுவிபரமும் பெற இயலும் ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.