சேலத்தில் டாடா மோட்டார்சின் புதிய ஷோரூம் திறப்பு

சேலம் மாநகரில் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகன பிரிவின் புதிய ஷோரூம் திறக்கப்பட்டுள்ளது.  எல்.ஆர்.என் மோட்டார்ஸ் மூலம் சேலத்தில் வர்த்தக வாகன விற்பனை தொடங்கப்பட்டுள்ளது.

சேலம் எல்ஆர்என் மோட்டார்ஸ்

தென்னிந்தியாவின் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் நகரமான சேலத்தில் குறிப்பாக டிரக் விற்பனை மிகவும்  அதிகமாக உள்ள பகுதியாக கருதப்படுகின்றது.

3S வசதிகள் கொண்ட இந்த ஷோரூமில் , விற்பனை , சர்வீஸ் மற்றும் உதிரிபாகங்களும் கிடைக்கும். மிக சிறப்பான பல வசதிகளை கொண்டுள்ள இந்த டீலரில் ஓரே நாளில் 26 வர்த்தக வாகனங்கள் வரை பழுது பார்க்கும் வசதி உள்ளது.

திறப்பு விழாவில் கலந்து கொண்டு பேசிய டாடா மோட்டார்சின்  துனை தலைமை செயல்அதிகாரி  ராமகிருஷ்னன் தெரிவிக்கையில் சேலம் பகுதியில் இந்த ஷோரூம் மூலம் டிரக் விற்பனையில் புதிய மாற்றத்தை தரும் என தெரிவித்தார்.

எல் ஆர் என் மோட்டார்ஸ் சேலத்தில் ஏஸ் ஜிப் 0.5 டன் முதல் 49 டன் பிரைமா டிரக் வரை விற்பனை செய்யப்பட உள்ளது.