சேலத்தில் மஹிந்திரா மோஜோ பிரத்யேக டீலர் திறப்பு

டெல்லி, சேலம் மற்றும் வதோத்ரா ஆகிய மூன்று நகரங்களில் பிரத்யேக மஹிந்திரா மோஜோ டீலரை இந்நிறுவனம் திறந்துள்ளது.  முதன்முறையாக சில மாதங்களுக்கு முன் பெங்களூரில் மோஜோ டீலரை திறந்திருந்தது.

மஹிந்திரா மோஜோ டீலர்

டூரர் ரக ஸ்போர்ட்டிவ் பைக் மாடலான மஹிந்திரா மோஜோ பைக் மாடலுக்கு என பிரத்யேக டீலர்களை நாடு முழுவதும் இந்நிறுவனம் திறக்க தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் சேலம், டெல்லி மற்றும் வதோத்ரா ஆகிய நகரங்களிலும் திறக்கப்பட்டுள்ளது.

திறக்கப்பட்டுள்ள மூன்று ஷோரூம்களிலும் விற்பனை, விற்பனைக்கு பிந்தைய சேவை மற்றும் உதிரிபாகங்கள் ஆகிய மூன்றும் கிடைக்கப் பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சேலத்தில் எஸ்ஆர்வி மோட்டார் சார்பாக திறக்கப்பட்டுள்ளது.

சேலம் நகரில் அமைந்துள்ள டீலர் முகவரி –  397-1, வடக்கு ஜங்சன் மெயின் ரோடு, மெய்யனுர், தி சென்னை சில்க்ஸ் அருகில், சேலம்

சேலம் – 397-1, Junction Main Road North, Meeyyanur, near The Chennai Silks, Salem

டெல்லி –  S-1/1, old Mahabir Nagar, Tilak Nagar, New Delhi.

வதோத்ரா –   GF – 4/5/6/7, Akarsh -1, Tower A, 30 Meter Gotri Road, Gotri, Vadodara

மோஜோ பைக்கில் 27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 4 ஸ்ட்ரோக் ஒற்றை சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க்  29.4என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

மஹிந்திரா மோஜோ பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 165கிமீ ஆகும். இதன் சராசரி மைலேஜ் லிட்டருக்கு 32கிமீ கிடைக்கலாம். மோஜோ பைக்கின் முன்பக்கத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக்கும் , பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க்கும் பயன்படுத்தியுள்ளனர். ஏபிஎஸ் ஆப்ஷனாலாக இல்லை.

மஹிந்திரா மோஜோ விலை ரூ. 1,80,110 (சேலம் எக்ஸ்-ஷோரூம்)

Recommended For You