பல்வேறு விதமான நவீன வசதிகளை கொண்டாதாக எஃப் டைப் கார்கள் கிடைக்கும் . இரண்டு விதமான மாறுபட்டவைகளில் இந்தியாவில் எஃப் டைப் கிடைக்கும். அவை வி8 எஸ் மற்றும் வி6 எஸ் ஆகும்.
வி6 எஸ்
ஜாகுவார் எஃப் டைப் வி6 எஸ் வேரியண்டில் 3.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி6 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 375பிஎச்பி மற்றும் டார்க் 480என்எம் ஆகும். 8 வேக ஆட்டோமேட்டிக் டபுள் கிளட்ச் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
0-100கிமீ வேகத்தினை தொட 4.9 விநாடிகளில் எட்டிவிடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 275கிமீ ஆகும்.
வி8 எஸ்
ஜாகுவார் எஃப் டைப் வி8 எஸ் வேரியண்டில்5.0 லிட்டர் சூப்பர்சார்ஜ்டு வி8 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 490பிஎச்பி மற்றும் டார்க் 625 என்எம் ஆகும். 8 வேக ஆட்டோமேட்டிக் டபுள் கிளட்ச் கியர் பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
0-100கிமீ வேகத்தினை தொட 4.3 விநாடிகளில் எட்டிவிடும். உச்சகட்ட வேகம் மணிக்கு 300கிமீ ஆகும்.
ஜாகுவார் எஃப் டைப் கார் விலை விபரம் (மும்பை விலை)
ஜாகுவார் எஃப் டைப் வி6 எஸ் விலை ரூ.1.37 கோடி
ஜாகுவார் எஃப் டைப் வி8 எஸ் விலை ரூ.1.61 கோடி