ஜீப் பிராண்டில் மாறிய டியூவி 300 எஸ்யூவி

மகேந்திரா & மகேந்திரா நிறுவனத்தின் 4 மீட்டருக்கு குறைவான மாடலாக வெளிவந்த மகேந்திரா டியூவி 300 எஸ்யூவி காரை சில கஸ்டமைஸ் மாறுபாடுகளை பெற்று ஜீப் பிராண்டு எஸ்யூவி கார் போன்ற உருவத்தை பெற்றுள்ளது.

மகேந்திரா டியூவி300

டாங்கி தோற்றத்தினை உந்துதலாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள டியூவி 300 காரானது மிக நேர்த்தியான மஹிந்திரா நிறுவனத்துகே உரித்தான பாக்ஸ் ஸ்டைல் வடிவமைப்பில் 5+2 என 7 இருக்கைகளுடன் சிறப்பான வசதிகளுடன் எம்ஹாக்80  1.5 லிட்டர் 3 சிலிண்டர் கொண்ட 84பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 230என்எம் ஆகும். இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் கிடைக்கின்றது.

எம் ஹாக்100 102 hp ஆற்றலை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 240 Nm ஆகும். இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் தவிர ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்சினை பெற்றுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 18.04 கிமீ ஆகும்.

முழுவிபரம் படிக்க – டியூவி300 எஸ்யூவி

கஸ்டமைஸ் டியூவி300

கோவைஎஸயின் சன்மேக் ஆட்டோமோட்டிவ் மிக நேர்த்தியாக் ஜீப் பிராண்டின் கிராண்ட் செரோக்கீ மாடலின் வடிவத்துக்கு ஈடுகொடுக்கும் வகையில் மிக நேர்த்தியாக ஜீப் பிராண்டு கிரில் பம்பர் தோற்றம் போன்றவற்றை சேர்த்து ஆடி க்யூ3 காரின் எல்இடி ஹெட்லேம்பை பொருத்தி அட்டகாசமாக கஸ்டமைஸ் செய்துள்ளது.

பைக்கில் பயன்படும் hp , ps  , nm  என்றால் என்ன ஆட்டோமொபைல் தமிழன்  மோட்டார் டாக்கீஸ் படிங்க – www.automobiletamilan.com/motor-talkies/

Recommended For You