ஜீப் காம்பஸ் எஸ்யூவி ஸ்பை படங்கள் வெளியானது

0

வருகின்ற ஸே பாலொ மோட்டார் ஷோ அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ள ஜீப் காம்பஸ் எஸ்யூவி எனப்படும் பிரிமியம் தொடக்கநிலை மாடலின் உற்பத்தி நிலை படங்கள் வெளியாகியுள்ளது. இந்தியாவில் காம்பஸ் எஸ்யூவி அடுத்த ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு வரலாம்.

ஜீப் கிராண்ட் செரோக்கீ எஸ்யூவி காரின் வடிவ தாத்பரியங்களை கொண்ட் மினி ரக எஸ்யூவி மாடலாக விளங்குகின்ற காம்பஸ் எஸ்யூவி காரின் தோற்ற அமைப்பில் பாரம்பரியமான கிரில் அமைப்புடன் நேர்த்தியான எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகளுடன் கூடிய ஹெட்லேம்ப் , பெரிய அலாய் வீல் , அகலமான சதுர வடிவ வீல் ஆர்ச் , எல்இடி டெயில் விளக்குகள் போன்றவற்றை பெற்றுள்ளது. இரட்டை வண்ண கலவையில்டாப் வேரியண்ட் இடம்பெற்றிருக்கும்.

Google News

இன்டிரியரில்  7 மற்றும் 5 இருக்கை ஆப்ஷன்களில் இடம்பெற்றிருக்க வாய்ப்புள்ள காம்பஸ் எஸ்யூவி காரில் பல நவீன வசதிகள் மற்றும் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் போன்றவற்றை பெற்றதாக விளங்கும்.

ஜீப் காம்பஸ் காரில் 172.3 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.0 லிட்டர் மல்டிஜெட் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இந்தியாவிலே உற்பத்தி செய்யப்பட உள்ள காம்பஸ் எஸ்யூவி காரின் விலை ரூ.25 லட்சத்தில் அமையலாம். இதன் போட்டியாளர்கள் ஹோண்டா சிஆர்-வி , ஹூண்டாய் டூஸான் , ஃபார்ச்சூனர் , எண்டேவர் மற்றும் ரெக்ஸ்டான் போன்றவை ஆகும்.

ஜீப் எஸ்யூவி கார்களின் விலை பட்டியல்

image source :