ஜீப் செரோக்கி எஸ்யூவி காரின் முழுமையான பல விவரங்கள் மற்றும் பார்வைக்கு நியூ யார்க் மோட்டார் ஷோவில் வைத்துள்ளது. ஜீப் செரோக்கி இந்த ஆண்டு இறுதிக்குள் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர ஃபியட் திட்டமிட்டுள்ளது.
ஜீப் செரோக்கி எஸ்யூவி காரில் 70க்கு மேற்பட்ட பாதுகாப்பு வசதிகள் உள்ள காராகும். குறிப்பாக காற்றுபைகள், பிரேக் உதவி, பிளைன்ட் ஸ்பாட், முன்புறத்தில் மோதுவதற்க்கு முன் எச்சரிக்கை (விபத்து நடப்பதற்க்கு முன்) என பல வசதிகள் உள்ளன.
4 விதமான மாறுபட்டவைகளாக ஜீப் செரோக்கி கிடைக்கும். அவை செரோக்கி ஸ்போர்ட்,செரோக்கி லிமிமெட், கெரோக்கி லேட்டிடீயூட் மற்றும் ஜீப் செரோக்கி ட்ரயில்ஹவாக். இரண்டு விதமான எஞ்சின்களில் கிடைக்கும்.
பேஸ் ஜீப் செரோக்கி எஞ்சினாக 2.4 லிட்டர் டைகர்சார்க் பொருத்தப்பட்டிருக்கும். டைகர்சார்க் பெட்ரோல் எஞ்சின் 184 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
மற்றுமொரு எஞ்சின் 3.2 லிட்டர் பென்டாஸ்டார் பொருத்தப்பட்டிருக்கும். பென்டாஸ்டார் பெட்ரோல் எஞ்சின் 271 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும்.
ஜீப் செரோக்கி மூன்று விதமான 4×4 மோட்டில் கிடைக்கும். முதல் மோட் ரியர் ஆக்ஸ்யிலுக்கு பவர் செல்வதை தவிர்த்து விட்டால் சிறப்பான மைலேஜ் கிடைக்கும்.
இரண்டாவது மோட் முழுமையான டார்க்கினை மேனேஜ் செய்ய முடியும். இதற்க்கு டிரைவரின் உழைப்பு தேவையில்லை.
மூன்றாவது மோட் மிக கடினமான சாலைகள், சேறு மற்றும் சகதி நிறைந்த, பனி படர்ந்த சாலைகளிலும் பயணிக்க முடியும்.
விரைவில் இந்தியாவில் ஜீப் செரோக்கி வெளிவரவுள்ளது.