டாடாவின் புதிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின்

0
டாடா நிறுவனம் தன்னுடைய முயற்சியில் புதிய 1.2 லிட்டர் டர்போ சார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தொடரினை உருவாக்கியுள்ளது. இந்த புதிய பெட்ரோல் என்ஜின் தொடரின் பெயர் ரெவர்டோன் தொடர் ஆகும்.

ரெவர்டோன் 1.2டி லிட்டர் 4 சிலிண்டர் கொண்ட டர்போசார்ஜ்டு மல்டிபாயின்ட் ஃப்யூல் இன்ஜெக்ட என்ஜின் ஆகும். இந்த என்ஜின் 83.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாகும். இதன் முறுக்கு விசை 140என்எம் ஆகும்.

ரெவர்டோன் 1.2டி லிட்டர்

1.2டி என்ஜின் மிக குறைவான கார்பன் வெளிப்படுத்தும். மேலும் அதிர்வுகள் மற்றும் சப்தம் போன்றவை மிக குறைவாகவே இருக்கும் என டாடா தெரிவித்துள்ளது. மேலும் பல்வேறு விதமான மோட்களை கொண்ட டிரைவினை பெறமுடியும் என கூறப்படுகின்றது.

Google News

ரெவர்டோன் என்ஜின் வகை முழுமையாக இந்தியாவிலே உருவாக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும். இதனை வருகிற ஆட்டோ ஷோவில் பார்வைக்கு வைக்க உள்ளது. மேலும் டாடாவி ஃபால்கான் காரில் பொருத்தப்பட உள்ளது.