டாடா நிறுவனம் பயணிகள் கார் சந்தையில் மிக சிறப்பான இடத்தில் இருந்து வருகின்றது. சில மாதங்களாகவே டாடா காரின் விற்பனை படு மந்தமாக உள்ளது. விற்பனையை அதிகரிக்க பல்வேறு விதமான சலுகைகளை டாடா மோட்டார்ஸ் வழங்கிவருகின்றது.
டாடா எஸ்யூவி கார்களான சுமோ, சஃபாரி மற்றும் ஆரியா கார்களுக்கு டாடாவின் கீழ் செயல்படும் ஜாகுவர் லேண்ட்ரோவர் எஞ்சின்களை பயன்படுத்த திட்டமிட்டுள்தாம்.
டாடா மோட்டார்ஸ் சிறிய ரக கார்கள் தயாரிப்பில் மிகுந்த அனுபவம் வாய்ந்த நிறுவனமாக விளங்குகின்றது.எனவே டாடாவுடன் இனைந்து புதிய கார்களை உருவாக்குவதற்க்கான திட்டங்கள் இல்லை. ஆனால் நுட்பங்கள் மற்றும் எஞ்சின்களை பகிர்ந்து கொள்ள மட்டும் முடிவு செய்துள்ளதாக ஜாகுவர் லேண்ட்ரோவர் தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளது தற்பொழுது தயாரிப்பில் உள்ள சிறிய ரக எஞ்சின்கள் மற்றும் வரும்காலத்தில் தயாரிக்கப்பட உள்ள 2.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின்களை டாடாவுக்கு தருவோம் என கூறியுள்ளார்.
இதனால் டாடா மோட்டார்ஸ் விற்பனை புதுவேகம் எடுக்கும் என நம்பலாம்.