டாடா ஜீக்கா ( Tata Zica )கார் உலக அரங்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. டாடா ஜீக்கா கார் வரும் ஜனவரி 2016யில் விற்பனைக்கு வரவுள்ளது. கால்பந்தாட்ட வீரர் லியோனல் மெஸ்ஸியை சர்வதேச விளம்பர தூதுவராக டாடா மோட்டார்ஸ் நியமித்துள்ளது.
டாடா மோட்டார்சின் புனே , இத்தாலி மற்றும் லண்டனில் உள்ள டிசைன் மையங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்டுள்ள ஜீக்கா காரில் இரண்டு புதிய என்ஜின்களை பெற்றுள்ளது. மேலும் பல நவீன வசதிகளை சேர்க்கப்பட்டுள்ளன. இன்டிகா காருக்கு மாற்றாக ஜீக்கா நிலைநிறுத்தப்பட உள்ளது. இளம் வாடிக்கையாளர்களை வெகுவாக கவரும்.
தோற்றம்
டாடா மோட்டார்சின் டிசைன் தாத்பரியங்கள் ஸெஸ்ட் , போல்ட் மாடல்களில் மேம்பாடு அடைய தொடங்கியது. ஜீக்கா மாடலும் ஹாரிஸான் நெஸ்ட் தளத்தில் சிறப்பான வடிவத்தினை பெற்றுள்ளது. புதிய டாடாவின் தேன்கூடு கிரிலுக்கு மத்தியில் அமைந்துள்ள லோகோ மற்றும் முகப்பு விளக்குகளை சுற்றிய கருப்பு வண்ணம் வட்ட வடிவ பனி விளக்கு அறையில் குரோம் பூச்சு போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.
பக்கவாட்டில் மிக நேர்த்தியான முறையில் அமைந்துள்ள கோடுகள் மற்றும் 14 இஞ்ச் அலாய் வீல் சிறப்பாக உள்ளது. பின்புறத்தில் அமைந்துள்ள கோண சரிவுகள் மற்றும் டெயில் விளக்குகள் போன்றவை நன்றாக உள்ளது.
பரிமாணங்கள்
- நீளம் 3746மிமீ
- அகலம் 1647மிமீ
- உயரம் 1535மிமீ
- வீல்பேஸ் 2400மிமீ
- கிரவுண்ட் கிளியரண்ஸ் 170மிமீ
- டேங்க் கொள்ளளவு 35 லிட்டர்
- டயர் 175/65 R14 (டீயூப்லஸ்)
- வீல் 14 இஞ்ச்
- எடை 1080 கிலோ (டீசல் ) 1012 கிலோ (பெட்ரோல் )
- பூட் ஸ்பேஸ் 242 லிட்டர் கொள்ளளவு
உட்புறம்
உட்புறத்தில் இரட்டை வண்ண கலவை டேஸ்போர்டில் சிறப்பான 22 புதிய வசதிகளை ஜீக்கா கார் பெற்றுள்ளது. 2400மிமீ வீல் பேஸ் கொண்டிருக்கும் ஜீக்கா காரில் சிறப்பான இடவசதியை பெற்றுள்ளது. ஃபேபரிக் இருக்கைகள் , கதவு திறந்துள்ளதை காட்டும் டிஸ்பிளே , ஸ்பீடோ மீட்டர் , டிரிப் மீட்டர் , எரிபொருள் அளவு போன்றவற்றை பெற்றுள்ள இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் உள்ளது.
ஹார்மன் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்துடன் 8 ஸ்பீக்கர்கள் இணைந்துள்ளது. பூளூடூத் தொடர்பு , ஆக்ஸ் , யூஎஸ்பி போன்றவற்றை இணைக்க முடியும் மேலும் இந்த பிரிவில் முதன்முறையாக ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன் வழியாக நேவிகேஷன் சிஸ்டம் போன்றவை உள்ளது.
முதன் முறையாக ஜூக் கார் செயலியை பெற்றுள்ள டாடா ஸீக்கா காரில் ஹாட் ஸபாட் வழியாக பயணிகளுக்கான தனித்தனியான பாடல் தேர்வுகளை பெற்று கொள்ள இயலும்.
என்ஜின்
ஜீக்கா காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு விதமான என்ஜின் ஆப்ஷனுடன் விளங்குகின்றது. 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் போல்ட் மற்றும் ஸெஸ்ட் காரில் உள்ளது. மேலும் புத்தம் புதிய 1.05 லிட்டர் டீசல் ரெவோடார்க் என்ஜின் ஜீக்கா காரில் பயன்படுத்தபட்டுள்ளது.
ஜீக்கா பெட்ரோல் காரில் 1199 சிசி ரெவோட்ரான் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 85பிஎஸ் மற்றும் டார்க் 114என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது.
ஜீக்கா டீசல் காரில் 1047 சிசி ரெவோடார்க் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 85பிஎஸ் மற்றும் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது.
இரண்டிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுளது. மேலும் ஏஎம்டி கியர்பாக்ஸ் சற்று தாமதமாக விற்பனைக்கு வரலாம்.
சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்
முன்பக்கம் இன்டிபென்டென்ட் சஸ்பென்ஷன் மற்றும் மேக்பெர்சன் ஸ்ட்ரட்ஸுடன் இணைந்த காயில் ஸ்பீரிங் உள்ளது. பின்புறம் செமி இன்டிபென்டென்ட் செட்ப் மற்றும் ட்வீஸ்ட் பீம் உள்ளது. முன்புறம் டிஸ்க் மற்றும் பின்புறத்தில் டிரம் பிரேக் உள்ளது.
பாதுகாப்பு அம்சங்கள்
ஜீக்கா காரில் முன்பக்கத்தில் இரண்டு காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி மற்றும் காரனர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் , வேகத்தினை உணர்ந்து கதவுகள் தானாக மூடி கொள்ளும் வசதி மற்றும் என்ஜின் இம்மொபைல்ஸர் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன.
போட்டியாளர்கள்
செலிரியோ , ஐ10 , பீட் போன்ற மாடல்களுக்கு டாடா ஜீக்கா போட்டியாக அமைந்துள்ளது.
வருகை மற்றும் விலை
வரும் ஜனவரி மாதம் விற்பனைக்கு வரவுள்ளது . ஜீக்கா காரின் விலை ரூ. 3.90 லட்சம் விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Tata Zica revealed spec details