டாடா ஜீக்கா வெற்றி பெறுமா ?

டாடா ஜீக்கா ஹேட்ச்பேக் கார் டாடா நிறுவனத்தை புதிய பாதையில் அழைத்து செல்லும் வல்லமை கொண்ட மாடலாக டாடா ஜீக்கா ( Tata Zica )வரவுள்ளது. ஜீக்கா காரின் சிறப்புகள் மற்றும் வெற்றி பெறுமா என்பதனை இந்த பகிர்வில் தெரிந்து கொள்ளலாம்.

tata-zica-car-md

 

இன்டிகா காரின் புதுப்பிக்கப்பட்ட XO தளத்தில் ஹாரிசான் நெக்ஸ்ட் தாத்பரியங்களின் அடிப்படையில் கைட் என்ற குறியீட்டு பெயில் உருவாக்கப்பட்டுள்ள ஜீப்பி கார் தான் ஜீக்கா (Zippy Car- ZICA ) ஆகும்.

ஜீக்கா கார் டிசைன்

டாடா நிறுவனத்தின் வடிவ தாத்பரியங்கள் சிறப்பாக அமைந்துள்ள காராக வந்துள்ள ஜீக்கா காரின் முகப்பு தோற்றம் தேன்கூடு கிரிலுக்கு மத்தியிலான டாடா லோகோ அமைந்துள்ளது. முகப்பு விளக்குகள் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. முகப்பு பம்பரில் கொடுக்கப்பட்டுள்ள கோடுகள் சிறப்பாக உள்ளது. பனி விளக்கு அறை சிறப்பாக உள்ளது.

பக்கவாட்டில் நேரத்தியான அலாய் வீல் மற்றும் சிறப்பான புரஃபைல் கோடுகளை கொண்டுள்ளது.  பின்புறத்தில் ஸ்போர்ட்டிவான டிசைனுடன் கூடிய  ஸ்பாய்லர் மற்றும் டெயில் விளக்குகள் உள்ளன.

Tata-Zica

ஜீக்கா இன்டிரியர்

டாடாவின் மற்ற மாடல்களை விட இன்டிரியர் மிக சிறப்பான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சிறப்பான ஃபினிஷ் செய்யப்பட்ட இன்டிரியர் மிகவும் நேர்த்தியாக அமைந்துள்ளது. 3 ஸ்போக்குகளை கொண்ட ஸ்டீயரிங் வீல் சிறப்பான இடவசதி 5 நபர்கள் தாரளமாக பயணிக்கும் வகையில் ஜீக்கா உள்ளது.

22 இடங்களில் நமக்கு தேவையான ஹோல்ட்கர்கள் மற்றும் பல பொருட்களை வைத்துக்கொள்ளும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. டாடா காரின் பூட் ஸ்பேஸ் 240 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.

Tata-Zica-dashboard

போல்ட் , ஸெஸ்ட் கார்களில் உள்ள பெரும்பாலான வசதிகளை ஜீக்கா பெற்றுள்ளது. குறிப்பாக 4 ஸ்பீக்கர்கள் மற்றும் ட்வீட்ர்களை கொண்டு ஹார்மேன் இன்ஃபோடெயின்மென்ட் அமைப்பு , ஆக்ஸ்,  பூளூடூத் மற்றும்  யூஎஸ்பி தொடர்புகளை தந்துள்ளது.

மேலும் முதன்முறையாக ஜூக் கார் செயலியை கொடுத்துள்ளது. இந்த செயலியை பயன்படுத்தி மொபைல் ஹாட்ஸ்பாட் வழியாக பயணிகளுக்கு விருப்பமான தனித்தனியான பாடல்களை கேட்க இயலும்.

ஜீக்கா என்ஜின்

புதிதாக டாடாவால் உருவாக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 1.05 லிட்டர் ரெவோடார்க் டீசல் என்ஜின் மற்றும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரெவோடார்க் என்ஜின்

69பிஹெச்பி ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் டார்க் 140என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. இரண்டிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

Tata-Zica-boot-space

ரெவோட்ரான் என்ஜின்

போல்ட் , ஸெஸ்டு கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். ட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. இரண்டிலும் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

பாதுகாப்பு அம்சங்கள்

டாடா ஜீக்கா காரில் முன்பக்க இரட்டை காற்றுப்பைகள் , ஏபிஎஸ் , இபிடி போன்ற பாதுகாப்பு அமுசங்கள் அனைத்து வேரியண்டிலும் நிரந்தரமாக சேர்க்கப்பட்டிருக்கும். வேகத்தினை உணர்ந்து தானியங்கி முறையில் கதவுகள் லாக் ஆகும் வசதி உள்ளது.

tata-zica-top

போட்டியாளர்கள்

இந்த பிரிவில் முன்னனி விற்பனையாளராக விளங்கும் மாருதி செலிரியோ காருக்கு நேரடி சவாலாகவும் ஐ 10 , பீட் போன்ற கார்களுக்கும் சவாலாக ஸீக்கா இருக்கும்.

ஜீக்கா வெற்றி பெறுமா ?

ஏஎம்டி விற்பனை அதிகரித்து வரும் நிலையில் ஜீக்கா காரில் ஏஎம்டி மாடல் விற்பனையின் பொழுதோ அல்லது தாமதமாகவோ வர வாய்ப்புகள் உள்ளது. செலிரியோ காரில் உள்ள ஏஎம்டி மாடல் சிறப்பான எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றது. டாடாவின் தரம் ஜீக்கா காரில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

போட்டியாளர்களை விட குறைவான விலையில் ஜீக்கா விற்பனைக்கு வரலாம் 3.80 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படும் ஜீக்கா கார் நல்ல விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கலந்துரையாட வாருங்கள் ; டாடா ஜீக்கா பற்றிய உங்கள் கருத்தை பதிவு செய்ய இந்த லிங்க் வழியாக சென்று ஆட்டோமொபைல் தமிழன் ஃபோரம் பக்கத்தில் உங்கள் கருத்தை பதிவு செய்யலாம். 

இணைப்பு ; டாடா ஜீக்கா பற்றிய பார்வை

[envira-gallery id=”3889″]