டாடா டிரக்களுக்கு 4 வருட வாரண்டி

0
வர்த்தக வாகனங்கள் தயாரிப்பதில் முன்னிலையில் விளங்கும் டாடா மோட்டார்ஸ்  டிரக்களுக்கு 4 வருட வாரண்டியை அறிவித்துள்ளது. இதன் மூலம் டாடா லாரிகளின் விற்பனை அதிகரிக்கும்.
டாடா நிறுவனம் வர்த்தக வாகன உற்பத்தியில் 60 ஆண்டுகளை நெருங்கிவருகிறது. இந்திய முழுவதும் 15 இலட்சத்திற்க்கு மேற்பட்ட டாடா லாரிகள் பயணித்து வருகின்றது. வர்த்தக வாகனங்களின் சாலைகளில் ஏற்படும் ப்ரேக் டவுன் பொழுது உதவி செய்ய “டாடா அலர்ட்” என்ற சேவையை வழங்கி வருகிறது. வாகனங்ளின் பிரச்சனையை பொறுத்து விரைவாக சரி செய்து தரப்படுகிறது. மேலும் சற்று அதிகப்படியான பிரச்சனைகள் என்றால் சரக்கினை டாடா அலர்ட் மூலம் கொன்டு செல்லவும் வழி வகுக்கின்றது.
டாடா அலர்ட் சேவைக்கான இலவச நம்பர் 1800-209-7979

அனைத்து வர்த்தக வாகனங்களுக்கும்(Commercial Vehicles) 4 வருட வாரண்டினை அறிவித்துள்ளது. 4 வருட வாரண்டியானது டிரைவ்லைன்க்கு(என்ஜின், க்யர பாக்ஸ் மற்றும் ரியர் அக்ஸ்ல்(rear axle)) மட்டும். மற்றவைகளுக்கு 18 முதல் 24 மாதம் வாரண்டினை தருகிறது. இந்த சலுகை 2013 ஜனவரி 6க்கு பின்பு வாங்கும் வாகனங்களுக்கு மட்டுமே.

tata motors hcv