டாடா டீகோர் செடான் கார் ரூ.4.70 லட்சம் ஆரம்ப விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. டீகோர் கார் மிக நேர்த்தியான ஸ்டைலிசான ஸ்டைல்பேக் பூட்டினை பெற்று விளங்குகின்றது.

டாடா டீகோர்

  • ரூ.4.70 லட்சம் விலையில் பெட்ரோல் எஞ்சின் பெற்று டீகோர் மாடல் தொடங்குகின்றது.
  • ஸ்டைல்பேக்  என அழைக்கப்படுகின்ற மிக நேர்த்தியான கூபே ரக கார்களை போன்ற பூட்டினை பெற்றுள்ளது.
  • டியாகோ ஹேட்ச்பேக் மாடலை அடிப்படையாக கொண்டதே டீகோர் செடான் மாடலாகும்.

 

டிசைன்

டாடா நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்ட டாடா டிகோர் கார் மாடலானது ஹேட்ச்பேக் ரக டியாகோ காரினை அடிப்படையான செடான் ரக கார் மாடலாகும். மிக நேரத்தியான தேன் கூடு போன்ற வடிவமைப்பினை தருகின்ற கிரிலுக்கு மத்தியில் அமைந்துள்ள டாடா லோகா சிறப்பான முகப்பு தோற்றத்தை கொடுப்பதுடன் புராஜெக்டர் லென்ஸ் கொண்ட முகப்பு விளக்கினை பெற்றுள்ளது.

tata-tigor-interior-1 டாடா டிகோர் கார் பற்றி அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்

பக்கவாட்டில் டியாகோ போன்ற அமைப்புடன் அமைந்துள்ள பெட்ரோல் மாடலில் 15 அங்குல அலாய் வீல் மற்றும் டீசல் மாடலில் 14 அங்குல அலாய் வீல் பெற்றிருப்பதுடன் பின்புற பூட்டினை மிக நேர்த்தியாக கூபே கார்களுக்கு இணையான அமைப்பினை கொண்ட ஸ்டைல்பேக் அமைப்பை வழங்கியுள்ளது.

டியாகோ காரின் இன்டிரியர் அமைப்பினையை போன்ற பெற்ற உட்புற வடிவமைப்பினை பெற்றதாக விளங்க உள்ள டிகோர் காரில் கனெக்ட்நெக்ஸ்ட் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இடம்பெற்றிருப்பதுடன்

69 bhp ஆற்றலை வழங்கும் புதிய 1.05 லிட்டர் ரெவோடார்க் என்ஜின் டார்க் 140 Nm ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா போல்ட் , ஸெஸ்ட் கார்களில் பயன்படுத்தப்பட்டுள்ள அதே 1.2 லிட்டர் ரெவோட்ரான் என்ஜின் ஆற்றல் 83.8பிஹெச்பி மற்றும் டார்க் 114 என்எம் ஆகும். சிட்டி மற்றும் இக்கோ இரண்டு விதமான டிரைவிங் ஆப்ஷன் உள்ளது. 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

 வேரியன்ட் பெட்ரோல் மாடல் டீசல் மாடல்
XE  ரூ. 4.70 லட்சம் ரூ.5.60 லட்சம்
XT ரூ. 5.41 லட்சம் ரூ.6.31 லட்சம்
XZ ரூ. 5.90 லட்சம் ரூ. 6.80 லட்சம்
XZ (O) ரூ. 6.19 லட்சம் ரூ.7.09  லட்சம்

விலை விபரம் எக்ஸ்-ஷோரூம் டெல்லி