டாடா நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி காருக்கு நல்ல வரவேற்பு

0
டாடா ஜென்எக்ஸ் நானோ ஏஎம்டி காருக்கு 3000 முன்பதிவுகளுக்கு மேல் செய்துள்ளனர். நானோ ஏஎம்டி மாடலுக்கு 70 % முன்பதிவு நடந்துள்ளது. குறைவான விலையில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்ட காராகும்.

நானோ ஜென்எக்ஸ்
மெனுவல் நானோ காரைவிட தானியங்கி மெனுவல் டிரான்ஸ்மிஷன் காருக்கு மிக சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. 1.99 லட்சம் தொடக்க விலையில் மெனுவல் நானோவும் 2.81 லட்சத்தில் ஏஎம்டி மாடல் தொடக்க விலையில் கிடைக்கின்றது.
மே மாதம் அறிமுகம் செய்யப்பட்ட புதிய நானோ ஜென்எக்ஸ் இதுவரை 1000 கார்கள் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 2000 கார்கள் டெலிவரி செய்ய உள்ளனர். இவற்றில் 70 % கார்கள் ஏஎம்டி மாடல் பொருத்தப்பட்டதாகும்.
கடந்த மே மாதம் 21 % வளர்ச்சியை நானோ பதிவு செய்துள்ளது. நானோ ஜென்எக்ஸ் ஏஎம்டி 6 வாரங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
நானோ ஏஎம்டி கார் வாங்கலாமா ?
நானோ ஜென்எக்ஸ் கார் விலை விபரம்
நானோ GenX XE — ரூ.2.14 லட்சம்

நானோ GenX XM — ரூ.2.43 லட்சம்

நானோ GenX XT — ரூ.2.62 லட்சம்

நானோ GenX XMA — ரூ.2.81 லட்சம் (ஏஎம்டி)

நானோ GenX XTA — ரூ.2.99 லட்சம்(ஏஎம்டி)

(all prices ex-showroom Chennai)
 Tata Nano GenX AMT Receives Good Response