Automobile Tamilan
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories
No Result
View All Result
Automobile Tamilan

டாடா நெக்ஸான் எஸ்யூவி முக்கிய சிறப்பம்சங்கள் வெளியானது!

by MR.Durai
24 July 2017, 5:29 pm
in Auto News
0
ShareTweetSend

விட்டாரா பிரெஸ்ஸா, ஈக்கோஸ்போர்ட் உள்ளிட்ட காம்பேக்ட் எஸ்யூவி மாடல்களுக்கு மிகுந்த சவாலாக அமைய உள்ள நெக்ஸான் எஸ்யூவி காரின் வியக்கதக்க 5 முக்கிய அம்சங்களை டாடா வெளியிட்டுள்ளது.

நெக்ஸான் எஸ்யூவி முக்கிய சிறப்பம்சங்கள்

டாடா நிறுவனத்தின் முதல் 4 மீட்டருக்கு குறைவான நீளத்தை பெற்ற காம்பேக்ட் எஸ்யூவி மாடலாக வெளியிடப்பட உள்ள நெக்சன் எஸ்யூவி மாடலில் பல்வேறு சிறப்பம்சங்களுடன் கூடிய வசதிகளை கொண்டதாக விளங்குகின்றது.

எஞ்சின்

விரைவில் சந்தையில் களமிறங்க உள்ள நெக்ஸானில் 4 மீட்டருக்கு குறைவான காம்பேக்ட் ரக எஸ்யூவி பிரிவில் முதன்முறையாக சுவாரஸ்யமான சில வசதிகளை அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

டியாகோ மற்றும் டீகோர் போன்ற மாடல்களில் இடம்பெற்றிருந்த அதே ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சின் கூடுதல் பவர் மற்றும் டார்க் பெற்ற எஸ்யூவிக்கு ஏற்ற வகையில் 1.2 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 170Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ரெவோடார்க் வரிசையில் புத்தம் புதிதாக வரவுள்ள 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108bhp பவருடன் 260 Nm டார்க்கினை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இரண்டு எஞ்சினிலும்  6 வேக TA6300 சிங்க்ரோமெஸ் மேனுவல் கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும். ஆட்டோமேட்டிக் மாடல் பற்றி எந்த விபரமும் வழங்கப்படவில்லை

மல்டி டிரைவ் மோட்

இந்த பிரிவில் முதன்முறையாக மல்டி டிரைவ் மோட் வழங்கப்பட்டுள்ளது. இந்த மோடின் வாயிலாக நெக்சன் எஸ்யூவி மாடலை ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று விதமான டிரைவிங் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதற்காக கன்சோல் கியர் லிவர் பகுதியில் டயல் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக மூன்று விதமான மோட்களில் நமக்கு தேவையானதை மாற்றிக் கொள்ளலாம்.

ஈக்கோ டிரைவிங் மோட் அதிகப்படியான எரிபொருள் சிக்கனத்தை பெற உதவும்.

சிட்டி டிரைவிங் மோட் போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் ஓட்டுவதற்கு சிறப்பானதாக இருக்கும்.

ஸ்போர்ட் டிரைவிங் மோட் மூலமாக அதிக செயல்திறனை பெற வழிவகுக்கும் பயணத்தை தேற்கொள்ளலாம்.

மிதக்கும் தொடுதிரை அமைப்பு

விலை உயர்ந்த சொகுசு கார்களில் உள்ளதை போன்று 6.5 அங்குல ஹெச்டி தொடுதிரை மிக சிறப்பான வசதிகளை பெறும் வகையிலும். தொடுதிரையை ஓட்டுனர் எளிதாக கையாளும் வகையில் டேஸ்போர்டின் சென்டர் கன்சோல் மேல்புறத்தில் அமைக்கப்பட்டு இருக்கின்றது.

ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே

புதிய வரவு கார்களில் அடிப்படை அம்சமாக இணைந்து வரும் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே போன்றவற்றின் ஆதரவினை பெற்ற ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பெற்ற டாடா நெக்ஸான் காரில் தொடர்புகள், வாட்ஸ்அப் மெசேஜ், அழைப்புகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹோம் தியேட்டருக்கு இணையான ஒலி தரத்தை வழங்கும் 8 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது.

கிராண்ட் சென்டர் கன்சோல்

உயர்ரக சொகுசு மற்றும் ஆடம்ப கார்களில் இடம்பெற்றிருக்கின்ற வசதியை போன்ற பொருட்களை மிக இலகுவாக வைக்கும் வகையில் ஸ்லைடிங் அம்சத்தை பெற்ற ஸ்டோரேஜ் பாக்ஸாக நெக்ஸான் காரில் சிலைடிங் டம்போர் டோர் மெக்கானிசத்துடன் கூடிய கிராண்ட சென்டர் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.

வருகை மற்றும் விலை

உற்பத்தி கடந்த வாரத்தில் தொடங்கப்பட்டுள்ளதால் அடுத்த மாத இறுதி வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ள நெக்ஸான் ஆரம்ப விலை ரூ. 6.80 லட்சத்தில் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Related Motor News

கார் முதல் உப்பு வரை டாடா குழுமத்தின் சாம்ராஜ்யத்தை உருவாக்கிய ரத்தன் டாடா

2024 டாடா பஞ்ச் எஸ்யூவி விற்பனைக்கு வெளியானது

டாடா கர்வ் பெட்ரோல், டீசல் விலை மற்றும் சிறப்பம்சங்கள்

டாடா கர்வ் ICE காரின் சிறப்பு அம்சங்கள்

டாடாவின் எலக்ட்ரிக் எஸ்யூவி கூபே.. Curvv.ev டீசர் வெளியானது

7 லட்சம் நெக்ஸான் எஸ்யூவிகளை விற்பனை செய்த டாடா மோட்டார்ஸ்

Tags: Tata
ShareTweetSendShare

மோட்டார் செய்திகள்

மாருதி சுசூகி டிசையர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1.30 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு.!

range rover SV BESPOKE

சைபர் தாக்குதலால் தினமும் 7560 கோடி ரூபாயை இழக்கும் ஜாகுவார் லேண்ட்ரோவர்

மாருதி சுசூகி கார்களுக்கு ரூ.1 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

10 லட்சம் உற்பத்தி இலக்கை கடந்த ஓலா எலக்ட்ரிக்.!

GST 2.0., ரூ.20.80 லட்சம் வரை லெக்சஸ் கார்களின் விலை குறைப்பு

GST 2.0., ரூ.30.4 லட்சம் வரை விலை குறையும் லேண்ட்ரோவர் எஸ்யூவிகள்

வால்வோ ஐஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளுக்கு ரூ.6 லட்சம் வரை ஜிஎஸ்டி 2.0 பலன்கள்.!

ரூ.6.81 லட்சம் வரை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் ஜிஎஸ்டி 2.0 விலை குறைப்பு

ஜிஎஸ்டி 2.0., பிஎம்டபிள்யூ குழுமத்தின் கார்கள், மோட்டார்சைக்கிள் விலை குறைப்பு

ஹோண்டா இந்தியாவின் முதல் எலக்ட்ரிக் கார் 2026ல் அறிமுகம்

  • About Us
  • SiteMap
  • Contact us
  • Editorial
  • Privacy
  • Terms

2025 - Automobile Tamilan

No Result
View All Result
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • ஆட்டோ செய்திகள்
  • வணிகம்
    • Truck
    • TIPS
    • Bus
    • Stories

2025 - Automobile Tamilan