டாடா பிரைமா டிரக்குகள் அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமனில் அறிமுகம்

0
டாடா மோட்டார்சின் பிரைமா வரிசை டிரக்குகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாட்டிலும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளனர்.

டாடா பிரைமா டிரக்

ஐக்கிய அரபு எமிரேட்சில் யூனிட்டேட் டீசல் மற்றும் அபுதாபில் தால்மா மோட்டார்ஸ் நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்பட உள்ளது. அல் ஹாசார் & கம்பெனி மூலம் ஓமனில் விற்பனை செய்யப்படும்.

ஐக்கிய அரபு எமிரேட்சில் இரு வேரியண்ட்களை அறிமுகம் செய்யபட்டுள்ளது. அவை பிரைமா 4438.S (4×2) டிரக் மற்றும் பிரைமா 4038.K (6×4) ஆகும்.

Google News

ஓமன் நாட்டில் 3 விதமான வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. பிரைமா டிரக் , டிப்பர் மற்றும் டேங்கர் ஆகியவை 4X2 மற்றும் 6X4 வகைகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏசி வசதி , ஆடியோ அமைப்பு , ஆர்ம்ரெஸ்ட் , அட்ஜெஸ்ட்பிள்  ஸ்டீயரிங் , மற்றும் ஜிபிஎஸ் வசதிகளை கொண்டிருக்கும். முழுமையான கட்டமைக்கப்பட்ட மாடலாக இந்தியாவில் இருந்து அரபு எமிரேட்ஸ் மற்றும் ஓமன் நாட்டிற்க்கு ஏற்றுமதி செய்யப்படும்.

டாடா பிரைமா டிரக்

டாடாவின் பிரைமா டிரக்குகளின் கேபின் வசதி இத்தாலியின் வடிவத்தினை கொண்டது. என்ஜின் தொழில்நுட்பமானது அமெரிக்கா மற்றும் ஐரோப்பிவை சேர்ந்தது. கியர்பாக்ஸ் நுட்பம் ஜெர்மணியை சேர்ந்தது. அடிச்சட்டம் மெக்சிக்கோவையும் சீட் மெட்டல் ஜப்பான் மற்றும் கொரியாவில் இருந்தும் டிரக்குகளை வெல்டிங் செய்யும் ரோபட்கள் சுவீடனை சேர்ந்தது எனவேதான் டாடா பிரைமா டிரக்குகளை உலகடிரக் என அழைக்கின்றது.

மேலும் படிக்க
டாடா பிரைமா டி1 ரேஸ் பற்றி