டாடா மோட்டார்ஸ் 5000 பஸ்களுக்கு ஆர்டரை பெற்றுள்ளது

0

இந்தியாவின் முன்னனி வர்த்தக வாகன தயாரிப்பாளரான டாடா மோட்டார்ஸ் பல்வேறு மாநில மற்றும் நகர போக்குவரத்து கழகங்கள் வாயிலாக ரூ.900 கோடி மதிப்பில் 5000 பஸ்களுக்கான ஆர்டரினை பெற்றுள்ளது.

 

Google News

25 மாநிலங்களிலிருந்து 5000 பேருந்துகளுக்கான ஆர்டரினை பெற்றுள்ள டாடா அதிகபட்சமாக ஆந்திராபிரதேசம் மாநிலத்தில் 1200 பஸ்கள் , உத்திர பிரதேசம் மாநிலத்தில் 1100 பஸ்கள் மற்ற போக்குவரத்து கழகங்களில் மும்பை பெஸ்ட் கழகத்தில் 300 பேருந்துகள் , ஹிமாச்சல் பிரதேசம் 300 பேருந்துகள் உத்திராகண்ட் 365 பேருந்துகள் மற்ற கழகங்களில் மீதுமுள்ள 1735 ஆர்டர்களை மற்ற கழகங்களில் இருந்து பெற்றுள்ளது.

பெறப்பட்டுள்ள ஆர்டர்களில் 3000 முதல் 3500 பேருந்துகள் மாநிலங்களுக்கு இடையிலான இன்டர்சிட்டி பேருந்துகளும் , 1500-2000 பேருந்துகள் வரை நகரம் வளர் நகரங்களுக்கான பேருந்துகள் 700 சிறிய பேருந்துகளும்அடங்கும். மேலும் ஆர்டரின் 75 சதவீத மதிப்பினை அடிசட்டத்தை கொண்ட பேருந்துகாளகவும் மற்ற 25 சதவீத பேருந்துகள் முழுதும் கட்டமைக்கப்பட்ட JNNuRM பேருந்துகளாகும்.

மேலும் இந்த ஆர்டரில் மும்பை மாநகருக்கான 25 ஹைபிரிட் பேருந்துகளும் அடங்கும். அடுத்தப்படியாக 18 அடி நீளமுள்ள 25 ஆர்டிகுலேட்டேட் பேருந்துகள் ஹூப்ளி-தாரவாத் பகுதிக்கு டெலிவரி செய்யப்பட உள்ளது. ஆகஸ்ட் முதல் டெலிவரி தொடங்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை 1200 பேருந்துகளுக்கு மேல் டெலிவரி கொடுக்கப்பட்டுள்ளது.

 

ஆர்டர்களை பெற்றது குறித்து வர்த்தக வாகன பிரிவு நிர்வாக இயக்குநர் ரவி கூறுகையில் பல்வேறு மாநில போக்குவரத்து கழகங்கள் வாயிலாக பெற்றுள்ள இந்த ஆர்டர்களின் வாயிலாக வர்த்தக வாகன பிரிவில் எங்களுடைய பங்கு மிக சிறப்பானதாக அமையும் என தெரிவித்துள்ளார்.