டாடா வர்த்தக வாகனங்களில் EGR மற்றும் SCR நுட்பங்கள் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்களில் பாரத் ஸ்டேஜ் 4 தரத்துக்கு ஏற்ற EGR மற்றும் SCR நுட்பங்கள் பொருத்தப்பட்ட மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. EGR நுட்பம் டாடா டிரக்குகளில் 2010 ஆம் ஆண்டு முதல் இடம்பெற்றுள்ளது.

டாடா வர்த்தக வாகனங்கள்

  • பாரத் ஸ்டேஜ் 4 தர எஞ்சின்களை பெற்ற மாடல்களாக டாடா வர்த்தக வாகனங்கள் மாறியுள்ளது.
  • சிறிய மற்றும் நடுத்தர ரக வாகனங்களில் அதாவது 180HP வரையிலான மாடல்களில் EGR நுட்பம் இடம் பெற்றுள்ளது.
  • 130HP முதல் 400HP வரையிலான பவரை வெளிப்படுத்தும் வாஎனங்களில் SCR நுட்பம் இடம் பெற்றுள்ளது.

டாடா மோட்டார்சின் வர்த்தக வாகனங்களில் நடைமுறைக்கு வந்துள்ள பாரத் ஸ்டேஜ்4 தரத்துக்கு இணையான மாசு காட்டுப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில்  EGR  எனப்படும் எக்ஸ்ஹாஸ்ட் கேஸ் ரீசர்குலேஷன் (exhaust gas recirculation) நுட்பம் மற்றும் SCR செலக்டிவ் கேட்டலைட்டிக் ரிடெக்ஷன் (Selective catalytic reduction) நுட்பமும் இடம்பெற்றுள்ளது.

கடந்த 2010 ஆம் ஆண்டு முதலே சிறிய மற்றும் நடுத்தர ரக வர்த்தக வாகனங்களில் அதாவது 180HP வரையிலான மாடல்களில் EGR நுட்பம் இடம் பெற்றுள்ளது. இது தவிர நடுத்தர ரக டிரக் முதல் கனரக டிரக்குகள் வரை 130HP முதல் 400HP வரையிலான பவரை வெளிப்படுத்தும் வாஎனங்களில் SCR நுட்பம் இடம் பெற்றுள்ளது.

சுற்றுசூழலுக்கு மாசு ஏற்படுத்தும் NOx வாயுகளை கட்டுப்படுத்தும் வகையிலான அம்சங்களை இரு நுட்பங்களும் பெற்று விளங்குகின்றது. குறைந்த விலையில் சிறப்பான செயல்திறன் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வெளிப்படுத்தக்கூடியதாக அமைந்திருக்கும்.

யூரோ 5 மற்றும் யூரோ 6 மாசு கட்டுப்பாடு எஞ்சின் பொருத்தப்பட்ட வாகனங்களை ஐரோப்பியா , ரஷ்யா , ஆஸ்திரேலியோ போன்ற நாடுகளுக்கு டாடா ஏற்றுமதி செய்து வருவது குறிப்பிடதக்கதாகும்.

Recommended For You