டாடா ஹெக்ஸா க்ராஸ்ஓவர் படங்கள் வெளியானது

0
டாடா ஹெக்ஸா க்ராஸ்ஓவர் எஸ்யூவி மாடலின் புதிய படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.  ஹெக்ஸா எஸ்யூவி மாடல் ஆர்யா எம்பிவி காரை அடிப்படையாக கொண்டதாகும்.
டாடா ஹெக்ஸா

 டாடா ஹெக்ஸா எஸ்யூவி ரக மாடல் ஆர்யா எம்பிவி காரை அடிப்படையாக கொண்டதாகும் . 7 இருக்கைகள் கொண்ட க்ராஸ்ஓவர் ரக மாடலாக வரவுள்ளது.  இதன் போட்டியாளர்களாக மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் க்ரெட்டா போன்றவை விளங்கும்.

ஹெக்ஸா காரில் 154 ஹெச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லிட்டர் VARICOR 400 டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 6 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் என இரண்டிலும் வரவுள்ளது.

கான்செப்ட் மாடலில் பெரிதாக மாற்றமில்லாமலே உற்பத்தி நிலைக்கு எட்டியுள்ள ஹெக்ஸா மாடலின் தோற்றம் மிக நேர்த்தியாக உள்ளது. இதன் கிரில் டாடாவின் புதிய பாரம்பரிய கிரிலுடன் நேர்த்தியாக உள்ளது.

ஸெஸ்ட் , போல்ட் போன்றே ஹெக்ஸா மாடலும் மிக தரமான மாடலாக டாடா மோட்டார்ஸ் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது இழந்த சந்தையை மீட்டெடுக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் தீவரமாக உள்ளது.

Tata Hexa crossover SUV details