டாடா மோட்டர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ள எதிர்கால பயணிகள் வாகன சந்தைக்கு புதிய டாமோ பிராண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முதல் டாமோ கார் ஜெனிவா மோட்டார் ஷோவில் அறிமுகம் செய்யப்படும். மேலும் டாமோ பிராண்டில் ஹைபிரிட் மற்றும் எலக்ட்ரிக் வாகனங்களும் தயாரிக்கப்பட உள்ளது.

டாமோ கார்

எதிர்கால மொபிலிட்டி தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் வரவுள்ள டாமொ பிராண்டுகள் மிக சிறப்பான வடிவ தாத்பரியங்களை கொண்டிருப்பதுடன் மிகவும் பவர்ஃபுல்லான கார்களாகவும் விளங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாமோ என்பதன் விளக்கம் டாடா மொபிலிட்டி ஆகும். (TAMO Stands for Tata Mobility or Tata Motors)

வருகின்ற மார்ச் 7 ,2017 ல் நடைபெற உள்ள 87வது ஜெனிவா மோட்டார் ஷோ ஆட்டோமொபைல் கண்காட்சியில் முதல் டாமோ பிராண்ட் கார் மாடல் சர்வதேச அரங்கில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய டாமோ ஃப்யூச்ரோ (TAMO Futuro) காரில் இரு இருக்கைகள் கொண்ட ஸ்போர்ட்டிவ் மாடலாக விளங்கும். மேலும் இந்த கார்களின் விலை ரூ.25 லட்சத்தில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முதல் டாமோ கார் 2018 ஆம் ஆண்டின் மத்தியில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

AMP (Advanced Modular Platform)

டாமோ பிராண்டில் உருவாக்கப்பட உள்ள மாடல்கள் AMP  எனப்படும் புதிய பிளாட்பாரத்திலே உருவாக்கப்பட உள்ளது. இந்த கார்கள் உலக தரம் வாய்ந்த டிசைன் தாத்பரியங்களுடன் மிகவும் சவாலான விலையில் சர்வதேச அரங்கில் விற்பனை செய்யப்பட உள்ளது.

டாடா நிறவனத்தின் அடுத்தடுத்து வரவுள்ள லேண்ட்ரோவர் டிஸ்கவரி ஸ்போர்ட் காரின் அடிப்படையிலான பிரிமியம் எஸ்யூவி கார்களான Q501 மற்றும் Q502 கார்களும் டாமோ பிராண்டிலே விற்பனை செய்யப்படலாம்.

டாமோ டீலர்கள்

மாருதியின் நெக்ஸா டீலர்களை போன்ற டாமோ கார்களுக்கு என தனித்துவமான டீலர்களை டாடா திறக்க திட்டமிட்டு வருகின்றது. இந்த புதிய டீலர்கள் வழியாகவே இந்த பிராண்டு கார்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் செய்யப்பட உள்ளது.

எலக்டரிக் கார்கள்

பெட்ரோல் , டீசல் கார்கள் மட்டுமல்லாமல் டாமோ பிராண்டில் எலக்ட்ரிக் கார்கள் , ஹைபிரிட் போன்ற ஆப்ஷன்களையும் வழங்க உள்ளது.

முதல் டாடா டாமோ ஸ்போர்ட்ஸ் கார் ஜெனிவா ஆட்டோ ஷோ அரங்கி எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் டீசர் படத்தை டாமோ வெளியிட்டுள்ளது.