ஏஎம்டி மாடலுடன் வந்த டியூவி300 கார் மொத்த முன்பதிவில் 50 சதவீத பங்கினை வகிக்கின்றது. கடந்த 2 மாதங்களில் டியூவி300 ஈக்கோஸ்போர்டை விற்பனையை காட்டிலும் சிறப்பாக உள்ளது.
82.85 பிஹெச்பி ஆற்றல் மற்றும் 230என்எம் டார்க் வெளிப்படுத்தும் எம்ஹாக்80 என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 5 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் உள்ளது.
மஹிந்திரா & மஹிந்திரா எக்ஸ்கூட்டிவ் டைரக்டர் பவன் குன்கா ஆட்டோகார் இந்தியாவுக்கு அளித்துள்ள பேட்டியில் எதிர்பார்க்கப்பட்ட அளவை விட மிக சிறப்பான முன்பதிவு எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது. மேலும் இவற்றில் 50 சதவீத ஏஎம்டி மாடலுக்கு கிடைத்துள்ளதாம்.
கடந்த அக்டோபர் மாதம் 4551 டியூவி300 கார்கள் விற்பனை ஆகியுள்ளது. மஹிந்திராவின் பயணிகள் வாகன வளர்ச்சி கடந்த ஆண்டின் அக்டோபர் மாதத்தை விட 19 % வளர்ச்சியை இந்த ஆண்டு அக்டோபரில் பதிவு செய்துள்ளது.