டிவிஎஸ் அப்பாச்சி 160 மற்றும் அப்பாச்சி 180 பைக்குகளை தொடர்ந்து வரவுள்ள அப்பாச்சி 200 பைக்கின் என்ஜின் தயாரிப்பில் பிஎம்டபிள்யூ மோட்டார்டு முக்கிய பங்கு வகித்துள்ளதாம்.

டிவிஎஸ் அப்பாச்சி 200

டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் உருவாகியுள்ள முதல் மாடலான ஜி 310 ஆர் ரோட்ஸ்டெர் நேற்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிவிஎஸ் டார்கன் எக்ஸ்21 கான்செப்ட் மாடலினை அடிப்படையாக கொண்ட அப்பாச்சி 200 ஆர்டிஆர் பைக்கில் 30 ஹெச்பி ஆற்றலை வழங்கும் 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம். இந்த என்ஜின் திரவத்தினால் குளிர்விக்கும் முறையில் உருவாக்கப்பட்டுள்ளதாம். இந்த அமைப்பிற்க்கு பிஎம்டபிள்யூ மோட்டார்டு நிறுவனத்தின் உதவியுடன் டிவிஎஸ் மோட்டார்ஸ் தயாரித்துள்ளது.

டிவிஎஸ் அப்பாச்சி

கொடுக்கப்பட்டுள்ள டார்கன் கான்செப்ட் படத்தில் உள்ளது போலவே அப்பாச்சி 200 பைக் விளங்கும். முகப்பில் எல்இடி பிளிங்கர் விளக்குகள் , எல்இடி டெயில் விளக்குகள் , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கன்சோல் , டீயூப்லெஸ் டயர் போன்றவற்றை பெற்றிருக்கும். மேலும் முன் மற்றும் பின்புறங்களில் டிஸ்க் பிரேக் ஏபிஎஸ் போன்றவை பெற்றிருக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் விலை ரூ.1.50 லட்சத்திற்க்குள் ஆன்ரோடு விலை இருக்கலாம்.

TVS Apache 200 engine details