Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

டிவிஎஸ் அப்பாச்சி 200 விரைவில் டெலிவரிக்கு தயார்

by automobiletamilan
ஜூன் 16, 2016
in செய்திகள்

கடந்த 5 மாதங்களுக்கு முன்னதாக அறிமுகம் செய்யப்பட்ட டிவிஎஸ்அப்பாச்சி 200 4வி ஸ்டீரிட் ஸ்போர்ட்டிவ் பைக் விற்பனைக்கு வராமலே உள்ள நிலையில் முதற்கட்டமாக முன்னனி மெட்ரோ நகரங்களில் அடுத்த சில வாரங்களில் டெலிவரி தொடங்கப்பட உள்ளது.

tvs-apache-rtr200-bike-photo

மெட்ரோ நகரங்களில் உள்ள டிவிஎஸ் மோட்டார்ஸ் டீலர்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக்குகள் வரதொடங்கியுள்ளது. எனவே முன்பதிவு மற்றும் விற்பனை அடுத்த சில வாரங்களில் தொடங்கலாம். மேலும் முதற்கட்டமாக கார்புரேட்டர் மாடல்கள் மற்றும் ஏபிஎஸ் பிரேக் இல்லாத மாடல்களே கிடைக்க வாய்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பாச்சி 200 என்ஜின்

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 21PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் இது  FI என்ஜின் ஆகும். இதன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 129 கிமீ ஆகும்.

tvs-apache-rtr-200-fi-engine

அப்பாச்சி ஆர்டிஆர் 200 4வி பைக்கில் 20.5 PS ஆற்றலை வெளிப்படுத்தும் 197.7 சிசி என்ஜினில் O3C கம்பஷென் சேம்பர் மூலம் ஆயில் மற்றும் ரேம் ஏர் மூலம் குளிர்விக்கப்படும் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 18.1 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் உள்ளது. மேலும் கார்புரேட்டர் என்ஜின் ஆகும். அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் உச்ச வேகம் மணிக்கு 128 கிமீ ஆகும்.

மேலும் படிக்க ; டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் விமர்சனம்

FI என்ஜின் மற்றும் ஏபிஎஸ் பிரேக் பொருத்தப்பட்ட மாடல்கள் அடுத்த சில மாதங்களிலும் விற்பனைக்கு வரலாம். மேலும் முதற்கட்டமாக முக்கிய நகரங்களில் மட்டுமே அப்பாச்சி 200  கிடைக்க உள்ளதால் நாடு முழுவதும் டெலிவரி தொடங்க மேலும் சில மாதங்கள் ஆகும்.

டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் அதிகார்வப்பூர்வ விலை விபரங்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. தோராயமாக ரூ.88,990 தொடக்க விலை முதல் ரூ.1,15,000 லட்சம் வரையிலான விலையில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அப்பாச்சி 200 பைக் படங்கள்

[envira-gallery id=”5537″]

Tags: RTR 200 4VTVSஅப்பாச்சி 200
Previous Post

ராயல் என்ஃபீல்டு இரு கஸ்டம் பைக்குகள் அறிமுகம்

Next Post

உலகின் விலை உயர்ந்த கார் டயர் – கின்னஸ் சாதனை

Next Post

உலகின் விலை உயர்ந்த கார் டயர் - கின்னஸ் சாதனை

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version