டிவிஎஸ் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் அறிமுகம்

0

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தங்களுடைய இருசக்கர வாகனங்களுக்கு 24/7 ரோடு சைடு அசிஸ்டன்ஸ் திட்டத்தை முதற்கட்டமாக 70 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது. மேலும் 200 நகரங்களில் டிவிஎஸ் ஆர்எஸ்ஏ (24/7 Road Side Assistance Program -RSA) அக்டோபர் 2016க்குள் அதிகரிக்கப்பட உள்ளது.

TVS-jupiter-MillionR-1

Google News

வாடிக்கையாளர்களுக்கு சாலையில் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வினை வழங்கும் நோக்கில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள 24 மணி நேரமும் செயல்படும் சாலையோர உதவி திட்டத்தின் வாயிலாக உதவி கீ தருதல் , எரிபொருள் வழங்குவது , சாலையோர ரீப்பேர் சேவை மேலும் பயணத்தை தொடர முடியாத வாடிக்கையாளர்களுக்கு மாற்றாக கேப் உதவி , விபத்துகளின் பொழுது வாகனத்தை எடுத்து செல்வது போன்ற சேவைகளை வழங்க உள்ளது.

Breakdown distance (One way) Respond Time*
0-25 Kms 45 mins
above 25 kms 60 mins+
  • இருசக்கர வாகனம் வாங்கி ஒன்று அல்லது இரண்டு வருடங்களுக்குள் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எவ்விதமான கட்டணமும் இல்லாமல் வழங்கப்பட உள்ளது.
  • மொபட் மற்றும் வாகனங்களுக்கு வாரண்டி காலம் கடந்திருந்தாலும் ரோடு சைடு அசிஸ்டன்ஸ் வசதி கிடைக்கும். எவ்விதமான மெம்பர்ஷிப் கட்டணும் இல்லாமல் சேவைக்கு ஏற்ப கட்டணத்தை வசூலிக்கப்படும்.
  • 24 மணி நேரமும் செயல்படும் 1800 419 2077 இலவச எண் வாயிலாகவோ அல்லது டிவிஎஸ்எம் ஆப் வழியாக உதவியை பெறலாம்.

ரோடு சைடு அசிஸ்டன்ஸ் வாயிலாக 28 மில்லியன் டிவிஎஸ் வாடிக்கையாளர்கள் நாடு முழுவதும் பயன்பெற உள்ளனர். முதற்கட்டமாக 70 நகரங்களில் தொடங்கப்பட்டுள்ள சேவை அக்டோபர் 2016 முதல் 200 நகரங்களுக்கும் மார்ச் 2017க்குள் நாடு முழுவதும் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக டிவிஎஸ் தெரிவித்துள்ளது.

3500க்கு மேற்பட்ட டீலர்களை கொண்டுள்ள டிவிஎஸ் நிறுவனம் அனைத்து டீலர்களின் வாயிலாக ஸ்கூட்டர் மற்றும் மோட்டார்சைக்கிள் என அனைத்துக்கும் வழங்கியுள்ளது.

இலவச அழைப்பு எண் – 1800 419 2077 அல்லது TVSM service App