டெஸ்லா மாடல் X |
டெஸ்லா மோட்டார்ஸ் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எலக்ட்ரிக் சொகுசு கார்களை தயாரிக்கும் நிறுவனமாகும். சிறந்த வசதிகளுடன் தனித்துவமான எஸ்யூவி காராக மாடல் X அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மாடல் எக்ஸ் எஸ்யூவி காரின் முன்பக்கத்தில் 259எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மோட்டாரும் , பின்பக்கத்தில் 503எச்பி ஆற்றலை வெளிப்பட்டுத்தும் மோட்டாரும் சேர்த்து மொத்த ஆற்றலாக 762எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் எலக்ட்ரிக் மோட்டார்களை பெற்றுள்ளது. இதன் முறுக்குவிசை 966என்எம் ஆகும்.
0 முதல் 100கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 3.2 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். டெஸ்லா மாடல் X காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 250கிமீ ஆக வேகமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள பேட்டரி ஒருமுறை சார்ஜிங் செய்தால் 400கிமீ வரை பயணிக்க இயலும்.
டெஸ்லாவின் மனம் கவரும் தோற்றத்தில் அமைந்துள்ள மாடல் எக்ஸ் காரில் அமைந்துள்ள முக்கிய அம்சங்களில் ஒன்றான பின்பக்க ஃபால்கன் சிறகு போன்ற கதவுகள் மிகவும் தனித்தன்மை வாய்ந்துள்ளது.
மாடல் எக்ஸ் ஃபால்கன் விங் கதவுகள் நெரிசலான பார்க்கிங் பகுதியில் வாகனம் நின்றாலும் அருகாமை வாகனங்களில் மோதாமல் அதற்கேற்ப அல்ட்ராசோனிக் சென்சார் உதவியுடன் அருகாமையில் உள்ள பொருட்களை கண்டுணர்ந்து செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாடல் எக்ஸ் எஸ்யூவி காரில் உள்ள ரியர் எக்டிவ் ஸ்பாய்லர் வாகனத்தின் வேகத்தை பொறுத்து மூன்று விதமான மாறுபட்ட அமைப்புகளில் தானியங்கி முறையில் செயல்படும் வல்லமை கொண்டதாகும்.
7 இருக்கைகள் மற்றும் 6 இருக்கைகள் என இரண்டு விதமான ஆப்ஷனை கொண்ட டெஸ்லா மாடல் X எஸ்யூவி காரில் உட்புறத்தில் தூய்மையான கேபினாக இருக்கும் நோக்கில் நுண்ணுயிரிகள், பாக்டீரியாக்களை தடுக்கும் வசதி கொண்ட HEPA வெளிக்காற்று சுத்திகரிப்பு அமைப்பும் உள்ளது.
மாடல் எக்ஸ் காரில் தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் , ரேடார் வாகனம் உருளுவதனை முற்றிலும் தடுக்கும் அமைப்பு என பல தரப்பட்ட நவீன பாதுகாப்பு வசதிகளை பெற்றுள்ளது.
டெஸ்லா மாடல் X எலக்ட்ரிக் எஸ்யூவி வரும் 2016ம் ஆண்டு முதல் விற்பனைக்கு வருகின்றது.
டெஸ்லா மாடல் X |
Tesla Model X crossover revealed