டொயோட்டா ஃபார்ச்சூனர் 4×4 ஆட்டோமேட்டிக் அறிமுகம்

0
இந்தியாவின் பிரிமியம் எஸ்யூவி சந்தையில் தனித்துவமான ஆளுமையை கொண்ட டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி காரில் 4×4 தானியங்கி பரப்புகையுடன் விற்பனைக்கு வந்துள்ளது.

டொயோட்டா இன்னோவா காரினை தொடர்ந்து பார்ச்சூனர் காருக்கும் புது தெம்பினை புகுத்தியுள்ளனர். கடந்த வருடம் 4×2 ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொண்டு விற்பனைக்கு வந்த பார்ச்சூனர் தற்பொழுது 4×4 ஏடி விற்பனைக்கு வந்துள்ளது.

டொயோட்டா ஃபார்ச்சூனர் எஸ்யூவி

பிரிமியம் எஸ்யூவி சந்தையில் முதன்மையாக விளங்கி வரும் ஃபார்ச்சூனர் கார் பல சிறப்புகளை பெற்ற எஸ்யூவியாக திகழ்கின்றது. புதிய 4×4 யில் 17 இன்ச் கருப்பு கிரே ஆலாய் வீல், பிளாக் இன்டிரியர், தொடுதிரை அமைப்பு மேலும் நேவிகேஷன் மற்றும் குரல் வழியாக இயக்கலாம்.

3.0 லிட்டர் என்ஜினில் மாற்றங்கள் இல்லை. இரு காற்றுபைகள் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது. மேலும் இரண்டு புதிய வண்ணங்களில் கிடைக்கும் அவை ப்ரோன்ஸ் மெட்டாலிக் மற்றும் ஸ்ல்வர் மெட்டாலிக் ஆகும்.

ஃபார்ச்சூனர் 2.5 லிட்டர் என்ஜின்

2.5 லிட்டர் என்ஜின் ஆப்ஷனிலும் ஃபார்ச்சூனர் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த என்ஜின் ஆப்ஷனில் டிஆர்டி ஸ்போர்டிவ் மாடல் மட்டுமே கிடைக்கும். இதே என்ஜினில் ஆட்டோமேட்டிக் (AT) மற்றும் மெனுவல்
டிரான்ஸ்மிஷன் (MT) இரண்டிலும் கிடைக்கும்.

விலையில் பெரிதான மாற்றங்கள் 2,5 லிட்டர் மற்றும் 3.0 லிட்டர் என்ஜினுக்கும் இல்லை என்பதனால் 3.0லிட்டர் என்ஜின் பெஸ்ட் சாய்ஸ்

ஃபார்ச்சூனர் கார் விலை


 2.5 L MT-  24.58 லட்சம்

2.5 L AT- 25.35 லட்சம்

3.0 L 4×2 MT-  24.18 லட்சம்

3.0 L 4×2 AT- 25.18  லட்சம்

3.0 L 4×4 MT- 25.50 லட்சம்

3.0 L 4×4 AT- 26.50 லட்சம்
(ex-showroom Mumbai)