டொயோட்டா நிறுவனத்தின் மிக பிரபலமான எம்பிவி இன்னோவா கார் 4 லட்சம் என்ற விற்பனை எட்டியுள்ளது. இதனை கொண்டாடும் வகையில் குரோம் பூச்சு கொண்ட ஆக்ச்சரீ பேக்கினை ரூ.31000 விலையில் அறிமுகம் செய்துள்ளது.
இந்த குரோம் பூச்சு இன்னோவா ஜிஎக்ஸ் வேரியண்டில் மட்டுமே கிடைக்கும். பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கும். இந்த பேக் அனைத்து டீலர்களிடமும் கிடைக்கும்.
கடந்த 2005 ஆம் ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு வந்த இன்னோவா 4லட்சம் கார்களை விற்பனை செய்துள்ளது.