மிக வசீகரமான புதிய தோற்றத்தில் புதிய கரொல்லா வரும் ஜூன் 6 அன்று அறிமுகம் செய்யப்பட்ட உள்ளது. புதிய கரொல்லா வடிவமைப்பு, இடவசதி, புதிய நுட்பங்கள் என இளம் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் வெளிவரவுள்ளது.
கரொல்லா காரில் உள்ள 1.8 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.4 லிட்டர் டீசல் என இரண்டு எஞ்சினும் மேம்படுத்தப்பட்டிருக்கும். முடுக்கியில் மாற்றங்கள் இருக்காது. உட்ப்புற கட்டமைப்பு நவீன வசதிகளுடன் சொகுசாக விளங்கும்.
கரொல்லா ஃப்யூரியா என்ற பெயரில் புதிய கரொல்லா 2014 ஆம் ஆண்டின் துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு வரவுள்ளது. புதிய கரொல்லாவில் நேர்த்தியான வடிவம், நவீன நுட்பங்கள், புதிய தோற்றத்துடன் முகப்பு கிரீல், அழகான முகப்பு விளக்குகள் மற்றும் மிக சிறப்பான இடவசதி என அசத்தும்..