இந்தியாவில் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனத்தின் 20 சதவிகித மாடல்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலை வரும் ஆண்டிற்குள் 90 சதவிகிதமாக உயர்த்த திட்டமிட்டுள்ளது.

ட்ரையம்ப் பைக்குகள்

இந்திய சந்தையில் டிரையம்ப் நிறுவனம் 5 பிரிவுகளில் 20க்கு மேற்பட்ட வாகனங்களை விற்பனை செய்து வருகின்றது. மானசேர் அருகே அமைந்துள்ள  ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் ஆலையில் 20 சதவிகித அளவிற்கே உற்பத்தி செய்யப்படுகின்றது.

வருகின்ற 2018 ஆம் ஆண்டு முதல் 90 சதவிதமாக உயர்த்த இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஜூன் முதல் மே வரையிலான இந்த நிதி ஆண்டில் 200 பைக்குகளை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டு முதல் 1200 பைக்குகளாக உயர்த்த திட்டமிட்டு வருகின்றது.

சமீபத்தில் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் நிறுவனம் ரூ.8.50 லட்சத்தில் புதிய 2017 ஸ்டீரிட் ட்ரிபிள் எஸ் மாடலை விற்பனைக்கு வெளியிட்டுள்ளது குறிப்பிடதக்கதாகும்.