Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

தோலா-சதியா பாலத்தின் சிறப்பம்சங்கள் சில வரிகளில்..!

by automobiletamilan
May 26, 2017
in Wired, செய்திகள்

இந்தியாவின் மிக நீளமான பாலம் என்ற பெருமையை பெற்றுள்ள தோலா-சதியா பாலம் பற்றி சிறப்பு தகவல்களை மிக விரைவாக படித்து அறிந்து கொள்ளலாம்.அசாம் மற்றும் அருணாச்சல பிரதேச மாநில எல்லைக்கு அருகில் 9.15 கிமீ நீளத்தில் பிரம்மபுத்திரா நதி மேல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

தோலா-சதியா பாலம்

அசாம் மாநிலத்தின் மேற்பகுதியில் அமைந்துள்ள டின்சுகியா மாவட்டத்தில் உள்ள தோலா மற்றும் சதியா என இரு நகரங்களுக்கு இடையில் 9.15 கிமீ தொலைவு நீளம் கொண்ட பாலமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

6 மணி நேர பயண தூரத்தை கொண்ட தொலைவை வெறும் 1 மணி நேரத்திற்குள் கடக்க தோலா-சதியா பாலம் உதவுகின்றது.

24X7 என எந்த நேரத்திலும் பயன்படுத்தும் வகையிலான இந்த பாலத்தை பயன்படுத்தலாம், வெள்ளம் மற்றும் பூகம்பம் போன்ற எந்த இயற்கை சீற்றத்தை தாங்கும் வல்லமை கொண்டதாகும்.

9.15 கிமீ நீளம் கொண்ட இந்த பாலத்தை 182 தூண்கள் தாங்கி பிடிக்கின்றது.

ரூபாய் 950 கோடி முதலீட்டில் கட்டமைக்கப்பட்டுள்ள இந்த பாலத்தின் முக்கிய பயனே சீனா எல்லையை மிக விரைவாக அடைவதற்கு மிகவும் உதவிகரமானதாக அமையும்.

நமது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள சீனாவிற்கு சவாலாக  ராணுவ வீரர்களையும் ராணுவத் தளவாடங்களையும் எல்லைப் பகுதிகளுக்கு விரைவாகக் கொண்டு செல்ல உதவும்.

நாள் ஒன்றுக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான எரிபொருளை சேமிக்க இந்த பாலம் வழிவகுக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

Automobile news in Tamil
  • auto
  • auto news
  • Control Panel

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version