நீல வண்ணத்தில் பட்டைய கிளப்பும் கஸ்டமைஸ் : டோமினார் 400 பைக்

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் 400சிசி என்ஜின் பொருத்தப்பட்ட டோமினார் 400பவர் க்ரூஸர் பைக்கினை நீல வண்ணத்தில் மிக நேர்த்தியாக நைட் ஆட்டோ கஸ்டமைஸர் மாற்றியமைத்துள்ளனர். பஜாஜ் டோமினார் பைக் விலை ரூ.1.38 லட்சம் ஆகும்.

டோமினார் 400 பைக்

கேடிஎம் 390 ட்யூக் பைக்கின் 373சிசி இன்ஜினை குறைந்த பவரை வெளிப்படுத்தும் வகையில் டிட்யூன் செய்த  34.50 hp பவரை 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும்.  இதில் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. மேலும் சிலிப்பர் கிளட்ச் ஆப்ஷன் சேர்க்கப்பட்டுள்ளது.  டோமினார் 400 பைக்கின் உச்ச வேகம் மணிக்கு 148 கிமீ ஆகும். 0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 8.32 விநாடிகள் எடுத்துக்கொள்ளும்.

  • என்ஜின் – 373cc
  • பவர் – 34.5 bhp @ 8000rpm
  • டார்க்: 35Nm @ 8500rpm
  • கியர்பாக்ஸ் – 6 வேகம்
  • எடை – 182 kg
  • எரிபொருள் கலன் – 13 லிட்டர்

மேலும் படிங்க – பஜாஜ் டோமினார் பற்றி 10 விஷயங்கள்

நைட் ஆட்டோ கஸ்டமைஸர் மிக நேர்த்தியாக பேனல்களில் மெட்டாலிக் நீல வண்ணத்தை நிரப்பி கூடுதலாக சிவப்பு வண்ணத்தை பிரேக் காலிப்பர்களில் பயன்படுத்தியுள்ளனர். இது தவிர இருக்கையில் லெதர் உறையை பயன்படுத்தியுள்ளனர்.

 

டோமினார் பைக் விலை விபரம்

  • டோமினார் 400 பைக் விலை ரூ. 1.38,625 லட்சம் (டிஸ்க் பிரேக்)
  • டோமினார் 400 பைக் விலை ரூ. 1.52,875 லட்சம் ( ட்வீன் சேனல் ஏபிஎஸ் மாடல்)

( தமிழ்நாடு எக்ஸ்-ஷோரூம் விலை )

கஸ்டமைஸ் டோமினார் 400 படங்கள் (படங்களை காண ஆட்டோமொபைல் தமிழன்)

[foogallery id=”17010″]

Recommended For You