Automobile Tamilan
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp
No Result
View All Result
Automobile Tamilan
No Result
View All Result

புதுப்பிக்கப்பட்ட நேதாஜி கார் அறிமுகம் – குடியரசு தலைவர்

by automobiletamilan
ஜனவரி 19, 2017
in செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் காரை இந்திய குடியரசு தலைவர் பிரனாப் முகர்ஜி சற்று முன் அறிமுகம் செய்துள்ளார்.  வீட்டு காவிலில் இருந்த பொழுது தப்பி செல்வதற்கு பயன்படுத்திய 4 கதவுகளை கொண்ட ஜெர்மன் வான்டேரர் செடான் காரினை பயன்படுத்தினார்.

 

நேதாஜி அவர்களை வீட்டு காவலில் மேற்குவங்க மாநிலத்தில் உள்ள கோல்கத்தாவில் அடைத்திருந்த நிலையில் 1941 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மாறுவேடத்தில் தப்பிசென்றார். நேதாஜி தப்பிசெல்ல அவரது உறவினர் சிசார் போஸ் என்பவர் உதவி செய்துள்ளார். இந்த காரை நேதாஜி கோல்கத்தா முதல் கோமோ வரை ஓட்டிசென்று தப்பித்துள்ளார்.

நேதாஜி கார்

BLA 7169 என்ற பதிவெண்ணை கொண்டுள்ள 4 டோர் ஜெர்மன் வான்டேரர் காரின் பெயின்ட் , பழைய பாகங்களை மாற்றி புதிய பாகங்களை சேர்ப்பது போன்றவற்றை புதுப்பித்து குறைந்த தூரத்தில் மட்டும் அதாவது 100 மீட்டர் முதல் 200 மீட்டர் வரை இயக்கும் வகையில் மறுஉருவாக்கம் செய்யப்படுதவதாக  நேதாஜி ஆராய்ச்சி அமைப்பு செயலாளர் கார்திக் தெரிவித்திருந்த நிலையில் தற்பொழுது புதுப்பிக்கப்பட்டுள்ளது.

வான்டெரர் W24

கடந்த 1937 ஆம் ஆண்டு வான்டெரர் W24 காரினை வான்டெரர் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.  வான்டெரர் W24 காரில் 4 சிலிண்டர் கொண்ட 1767 cc எஞ்சின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் பவர் 42 hp ஆகும். இதில் பவரை எடுத்துசெல்வதற்கு 4 வேக கியர்பாக்ஸ் பொருத்தபட்டுள்ளது.  1937 ஆம் ஆண்டில் சிசார் போஸ் தந்தை சரத் சந்திர போஸ் வாங்கி தன்னுடைய மகன் சிசார் போஸ் பெயரில் பதிவு செய்யதுள்ளார். சிசார்போஸ் இந்த காரினை 1971 ஆம் ஆண்டு வரை தொடர்ந்து பராமரித்து இயக்கி வந்துள்ளார்.

வான்டேர்ர் நிறுவனம் ஆனது பிற்காலத்தில் ஜெர்மனி நாட்டின் Auto Union group அங்கமாக செயல்பட தொடங்கியதை தொடர்ந்து தற்பொழுது ஆடி நிறுவனமாக மாறியுள்ளது. ஆடி நிறுவனம் நான்கு நிறுவனங்களின் கூட்டணியில் உருவாக்கப்பட்ட நிறுவனமாகும். அவை ஹார்ச் , DKW , ஆடி மற்றும்  வான்டேர்ர் (Horch, DKW Wanderer and Audi)  ஆகும்.

காரின் பழைய தோற்றம்

Tags: கார்
Previous Post

டாடா ஹெக்ஸா Vs டொயோட்டா இனோவா க்ரிஸ்டா – ஒப்பீடு

Next Post

2017 கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் அறிமுகம்

Next Post

2017 கேடிஎம் ஆர்சி 200 மற்றும் ஆர்சி 390 பைக்குகள் அறிமுகம்

  • auto
  • auto news
  • Sample Page

© 2023 Automobile Tamilan

No Result
View All Result
  • செய்திகள்
  • கார் செய்திகள்
  • பைக் செய்திகள்
  • வணிகம்
  • Auto Expo 2023
  • TIPS
  • bhp

© 2023 Automobile Tamilan

Go to mobile version