பஜாஜ் அவென்ஜ்ர் ஸ்டீரிட் 200 பைக்கின் படங்கள் தற்பொழுது வெளியாகியுள்ளது. பஜாஜ் அவென்ஜர் புதிய 200சிசி என்ஜினுடன் தோற்றத்தில் பல மாற்றங்களை கண்டுள்ளது.
பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 200 |
அவென்ஜர் பைக்கின் முன்பக்க தோற்றத்தில் வழக்கம் போல வட்ட வடிவ முகப்பு விளக்குகளுடன் க்ரூஸர் பைக்காக காட்சியளிக்கின்றது. இன்டிகேட்டர் இருக்கை போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது.
அலாய் வீல் , புகைப்போக்கி , என்ஜின் போன்ற பகுதியில் கருப்பு வண்ண ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளது. புதிய 200சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. 23 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் பல்சர் ஆர்எஸ்200 பைக்கில் உள்ள என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் அவென்ஜர் ஸ்டீரிட் 200 மாடல் தவிர மேலும் இரண்டு புதிய வேரியண்ட்களும் வரவுள்ளது. புதிய பஜாஜ் அவென்ஜர் க்ருஸர் பைக் விலை ரூ.84,000 முதல் ரூ.90,000 வரை இருக்கலாம் இன்னும் சில நாட்களில் சந்தைக்கு வருகின்றது.
பஜாஜ் அவென்ஜர் |
Bajaj Avenger Street 200 Spied