பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 220 படங்கள் வெளியானது

0
பஜாஜ் அவென்ஜர் க்ரூஸர் பைக் மூன்று விதமான வேரியண்டில் இன்னும் சில வாரங்களில் விற்பனைக்கு வரவுள்ளது. பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 220  பைக் படங்கள் வெளியாகியுள்ளது.
பஜாஜ் அவென்ஜர்

முன்பு ஸ்டீரிட் 200 பைக் படங்கள் இணையத்தில் வெளியானது தற்பொழுது வெளியாகி இருக்கும் படங்களின் மூலம் 220சிசி என்ஜின் ஆப்ஷனிலும் அவென்ஜர் தொடர்வது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அவென்ஜர் ஸ்டீரிட் 220

கருப்பு நிறத்தினை அடிப்படையாக கொண்டுள்ள அவென்ஜர் ஸ்டீரிட் 220 பைக்கில் அலாய் வீல் , ஃபிரேம் , கைப்பிடி , என்ஜின் , கிராப் ரெயில் , கண்ணாடி போன்றவை கருப்பு நிறத்தில் உள்ளது. பெட்ரோல் டேங்க் மேல் இன்ஸ்டூருமென்னட் கிளஸ்ட்டர் பொருத்தியுள்ளனர்.

அவென்ஜர் க்ரூஸ் 220

அவென்ஜர் க்ரூஸ் 220 பைக்கில் குரோம் பட்டைகளின் பயன்பாடு அதிகமாக உள்ளது, பெரிய வீன்ட்ஷில்டு , பெட்ரோல் டேங்கில் குரோம் பட்டையை பெற்றுள்ளது.

மேலும் படிக்க ; பஜாஜ் அவென்ஜர் ஸ்டீரிட் 200 பைக் விபரம்

அவென்ஜர் 220 பைக்குகளில் 19பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 220சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 19என்எம் , இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் இருக்கும்.

Bajaj Avenger street 200 and cruise 220 spied

imagesource