பஜாஜ் டிஸ்கவர் 100 , 100M , 125M பைக்குகளை ஓரங்கட்டியது

0
பஜாஜ் டிஸ்கவர் பைக் வரிசையில் 100 , 100M  மற்றும் 125M  போன்ற பைக் மாடலைகளை நீக்கியுள்ளது. டிஸ்கவர் 125S , 150S  மற்றும் 150F போன்ற மாடல்கள் விற்பனையில் இருக்கும்.

Discover 100M

தொடக்க நிலை மாடல்களான டிஸ்கவர் 100 ,  டிஸ்கவர் 100எம் பைக்குகள் குறைவான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வந்தது . அதற்க்கு மாற்றாக சிடி 100 மற்றும் பிளாட்டினா ES பைக்குளை நிலைநிறுத்தியுள்ளது.

புதிய பஜாஜ் டிஸ்கவர் 100 சிசி பைக் மாடல் எதிர்காலத்தில் வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் இந்த பைக்குகள் ஸ்டாக் இன்னும் உள்ளது என்பதால் அவைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தற்பொழுது விற்பனைக்கு வந்துள்ள பஜாஜ் அவென்ஜர் 150 ஸ்டீரிட் க்ரூஸர் பைக் சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.