பஜாஜ் டோமினார் வரிசையில் புதிய பைக்குகள் ?

சமீபத்தில் விற்பனைக்கு வந்த பஜாஜ் டோமினார் 400 பைக் மிக சவாலான விலையில் அமைந்து பைக் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் பஜாஜ் டோமினார் வரிசையில் கூடுதலாக சில பைக்குகள் வரவுள்ளது.

டொமினார் 400

2001 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த பஜாஜ் பல்ஸர் வரிசை கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியாவின் மிக சிறந்த தொடக்கநிலை ஸ்போர்ட்ஸ் பைக் மாடலாக விளங்கி வரும் நிலையில் புதிதாக வந்துள்ள டோமினார் பிராண்டில் முதலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள டோமினார் 400 விலை ரூ.1.38 லட்சம் தொடக்க விலையில் அமைந்து அமோக வரவேற்பினை பெற்றுள்ளது.

பல்சர் வரிசையில் அமைந்துள்ள 200சிசி மாடலான பல்ஸர் ஆர்எஸ்200 , பல்ஸர் எஸ்200 , பல்ஸர் என்எஸ்200 போல டோமினார் 400 பைக்கை அடிப்படையாக கொண்ட ஃபுல் ஃபேரிங் செய்யப்பட்ட மாடல் அதாவது டெல்லி ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் காட்சிக்கு வந்த எஸ்எஸ்400 போன்ற மாடலும் வரவாய்ப்புகள் உள்ளது. மேலும் இந்த பைக்கின் அடிப்பையில் ஸ்போர்ட்ஸ் டூரர் மற்றும் அட்வென்ச்சர் ரக மாடலையும் அறிமுகம் செய்ய வாய்ப்புள்ளது.

டோமினார் 400

டோமினார் 400 பைக்கில் அமைந்துள்ள அதே 373சிசி என்ஜின் பொருத்தப்பட்டு 34.5 ஹெச்பி பவர் மற்றும் 35 என்எம் டார்க் வெளிப்படுத்தி 6 வேக கியர்பாக்ஸ் அம்சத்துடன் இந்த பைக்கில் உள்ள பெரும்பாலான வசதிகளான எல்இடி ஹெட்லேம்ப் , சிலிப்பர் கிளட்ச் ,ட்வீன்சேனல் ஏபிஎஸ் போன்றவற்றை பெற்றதாக விளங்கும்.

Bajaj Dominar 400 white

புதிய மாடல்கள் அடுத்த ஆண்டின் மத்தியல் அல்லது இறுதியில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டோமினார் 400 பைக் இந்தியாவில் மாதம் 10,000 என்ற எண்ணிக்கையிலும் வெளிநாடுகளில் 5000 என்ற எண்ணிக்கையிலும் விற்பனை செய்ய பஜாஜ் திட்டமிட்டுள்ளது.