பஜாஜ் பல்சர் ஏஎஸ் 200 பைக் விலை அதிகரிப்பு

0
பஜாஜ் பல்சர் ஏஎஸ்200 பைக்கில் விலை ரூ. 2002 உயர்த்தப்பட்டுள்ளது. விற்பனைக்கு வந்தபொழுது என்எஸ்200 மாடலை விட குறைவான விலையில் வந்தது.

பஜாஜ் பல்சர் ஏஎஸ் 200 பைக்

பல்சர் ஏஎஸ் 200 பைக்கில் 23.5பிஹெச்பி  மற்றும் 18.3 என்எம் டார்க் வெளிப்படுத்தும் 200சிசி  என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதில் 6 வேக கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது.

புராஜெக்ட்ர முகப்பு விளக்குடன் ஸ்டைலிசான தோற்றத்தில் விளங்கும் பல்சர் ஏஎஸ்200 பைக்கின் முன்புறத்தில் 280மிமீ டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. பின்புறம் 230மிமீ டிஸ்க் பிரேக்கினை பெற்றுள்ளது.

அட்வென்ச்சர் ஸ்போர்ட்ஸ் ரக பைக்கில் பல்சர் AS 150 , பல்சர் AS 200 பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றது. ஏஎஸ் 200 பைக்கின் விலை மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது.

 பஜாஜ் பல்சர் ஏஎஸ் 200 பைக்கின் முந்தைய தமிழக விலை ரூ.93,602 புதிய விலை ரூ.95,604 எக்ஸ்ஷோரூம் தமிழ்நாடு விலை ஆகும்.

Bajaj Pulsar AS 200 Price hiked