மிகுந்த எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ள பஜாஜ் பல்சர் VS400 பைக் வருகை ஆகஸ்ட் மாதம் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் விற்பனைக்கு இந்த மாதத்திலும் விஎஸ்400 வருவதற்கான வாய்ப்புகள் இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.
சிஎஸ்400 என ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் வெளிப்பட்ட பஜாஜ் பல்சர் விஎஸ் 400 என பெயர் சமீபத்தில் உறுதியான நிலையில் பல்வேறு விதமான தகவல்கள் மற்றும் ஸ்பை படங்கள் என பல தகவல்கள் வெளியாகிவிட்ட நிலையில் விற்பனைக்கான தேதி அறிவிக்கப்படமால் உள்ளது.
ராஜீவ் பஜாஜ் ஆகஸ்ட் மாதம் வெளிவரும் என தெரிவித்திருந்த நிலையில் விற்பனைக்கு வராத பல்சர் விஎஸ் 400 பைக் வருகை குறித்து வணிக அபிவிருத்தி தலைவர் S ரவிக்குமார் மணிகன்ட்ரோல் தளத்துக்கு அளித்துள்ள பேட்டியில் வருகின்ற தசரா மற்றும் தீபாவளி பண்டிகையில் வாகன விற்பனை அமோகமாக இருக்கும் என்பதனால் தொடக்கநிலை மாடல்களின் (சிடி100 , பிளாட்டினா , பல்சர் வரிசை , டிஸ்கவர், அவென்ஜர்) உற்பத்தி திறனை அதிகரிப்பது அவற்றை டீலர்களுக்கு கொண்டு செல்வது போன்றவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி வருவதனால் பல்சர் விஎஸ்400 பைக் விற்பனைக்கு அடுத்த மாத இறுதியில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
பஜாஜ் பல்சர் VS400 எஞ்சின்
பல்சர் விஎஸ்400 பைக்கில் 34.51 hp (25.74 KW) ஆற்றல் 8000rpm யில் வெளிப்படுத்தும் வகையில் 373.27 சிசி எஞ்ஜின் இடம்பெற்றிருக்கும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம்.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குள் , பின்பக்கத்தில் மோனோ ஷாக் அப்சார்பர் இடம் பெற்றுள்ளது. இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக் ஆப்ஷனுடன் டியூவல் சேனல் ஏபிஎஸ் இடம்பெற்றுள்ளது. எல்இடி முகப்பு விளக்குகள் , எல்இடி பகல் நேர ரன்னிங் விளக்குகள் , எல்இடி டெயில் லைட் போன்ற வசதிகளுடன் புதிய டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் , பெட்ரோல் டேங்க் மேல் பகுதியில் டிஸ்பிளே , போன்றவை இடம்பெற்றிருக்கும்.
பஜாஜ் பல்சர் VS400 பைக்கின் எதிர்பார்க்கப்படும் விலை விலை ரூ. 1.80 லட்சத்தில் எக்ஸ்ஷோரூம் விலை இருக்கலாம்.
வருகின்ற பண்டிகை காலத்தில் மிக அதிகப்படியான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்யும் நோக்கில் அனைத்து வாகன தயாரிப்பாளர்களும் தீவரமான முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.