பஜாஜ் பாக்ஸர் மீண்டும் வருகையா ? பாக்ஸர் X150 க்ராஸ் சோதனை ஓட்டம்

இந்திய சந்தையிலிருந்து நீக்கப்பட்ட பஜாஜ் பாக்ஸர் பைக் மாடலை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வரும் வாய்ப்புகள் உள்ளதாகவே தெரிகின்றது. ஆஃப்ரோடுகளுக்கு ஏற்ற  பாக்ஸர் X150 க்ராஸ் மாடலின் சோதனை ஓட்ட படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.

Bajaj boxer

பஜாஜ் பாக்ஸர்

மிக மோசமான விற்பனையின் காரணமாக இந்தியாவில் நீக்கப்பட்ட பஜாஜ் பாக்ஸர் பல்வேறு வெளிநாடுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. பாக்ஸர் மற்றும்  பாக்ஸர் X150 க்ராஸ் பைக்குகள் கென்யா , ஜாம்பியா போன்ற நாடுகளில் விற்பனையில் உள்ளது.

சாதரன பாக்ஸர் மாடலுக்கும்  பாக்ஸர் X150 க்ராஸ் உள்ள வித்தியாசம் என்னவென்றால் மட்கார்டு , பாடி கிராபிக்ஸ் உள்பட ஆஃப்ரோடு சார்ந்த அம்சங்களை பெற்றதாகவே விளங்கும். சமீபத்தில் புனேவில் சோதனை ஓட்டத்தில் ஈடுபட்டிருந்த பாக்ஸர் எக்ஸ் 150 மாடல் பிஎஸ்4 எஞ்சின் ஆப்ஷனுடன் சோதிக்கப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளது.

Bajaj Boxer BM X150 Pics

Bajaj Boxer BM X150 Pics India 2

நீக்கப்பட்ட டிஸ்கவர் 150 பைக்கில் இடம்பெற்றிருந்த அதே 144.8 cc என்ஜின் 12 hp பவர் மற்றும் 12.26 Nm டார்க் வெளிப்படுத்தும்.

பாக்ஸர் க்ராஸ் இந்தியாவில் விற்பனைக்கு வரவாய்ப்புகள் உள்ளதாக எந்த அதிகார்வப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. ஆனால் விற்பனைக்கு வரும் வாய்ப்புகளும் உள்ளதாகவே கருதப்படுகின்றது.

spy -image : bikeadvice