இந்தியாவின் முன்னனி மோட்டார்சைக்கிள் தயாரிப்பாளரான பஜாஜ் தனது பைக்குகள் விலையை ரூ.700 முதல் ரூ.1500 வரை ஜனவரி 1 முதல் உயர்த்த உள்ளது. இந்த விலை உயர்வில் டோமினார் 400 பைக் இடம்பெறவில்லை.

அதிகரித்து வரும் உற்பத்தி செலவீனங்கள் மற்றும் அனைத்து இருசக்கர வாகனங்களும் 1 ஏப்ரல்  2017 முதல் பிஎஸ்4 தரத்துக்கு மாற வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் பெரும்பாலான இருசக்கர வாகன தயாரிப்பாளர்கள் விரைவில் விலையை அதிகரிக்க உள்ளனர். அந்த வரிசையில் பஜாஜ் முதலில் விலையை உயர்வினை அறிவித்துள்ளது.

இதுகுறித்து பஜாஜ் ஆட்டோ வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் உயர்ந்துவரும் உற்பத்தி மூலப் பொருட்களில் செலவீனங்களை ஈடுகட்டும் நோக்கிலே இந்த விலை உயர்வினை அறிவித்துள்ளாதாக தெரிவித்துள்ளது.

பஜாஜ் ஆட்டோ நிறுவனம் பல்ஸர் , வி ,டிஸ்கவர் , அவென்ஜர் , பிளாட்டினா வரிசைகளிலும் மற்றும் சிடி100 தற்பொழுது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட டோமினார் 400 போன்ற பைக்குகளை விற்பனை செய்து வருகின்றது. சமீபத்தில் டொயோட்டா , ஹூண்டாய் ,  ரெனோ ,நிசான் , ஹோண்டா , செவர்லே போன்ற கார் நிறுவனங்களும் விலை உயர்வினை அதிகரித்துள்ளது.